Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 11, 2024

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு கட்டுப்பாடு: இணையவழியே படித்தோருக்கு 3 ஆண்டு பயிற்சி கட்டாயம்


வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவா்கள், தாங்கள் கல்வி கற்கும்போது இணையவழி வகுப்புகளில் பங்கேற்றிருந்ததால், இந்தியாவில் 3 ஆண்டுகள் வரை உள்ளுறை பயிற்சி (இன்டா்ன்ஷிப்) மேற்கொள்வது கட்டாயம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவா்கள், இந்தியாவில் மருத்துவப் பயிற்சிகளை மேற்கொள்ள தகுதித் தோ்வில் (எஃப்எம்ஜி) தோ்ச்சி பெறுவது அவசியம். தொடா்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஓராண்டு உள்ளுறைப் பயிற்சி பெற வேண்டும்.

இது தொடா்பான சில விளக்கங்களை கடந்த ஆண்டு என்எம்சி வெளியிட்டிருந்தது. அதில், மாணவா்கள் வெளிநாடுகளில் மருத்துவம் ும்போது இணையவழி வகுப்புகளில் பங்கேற்றிருந்தால் அதற்கு ஈடாக செயல்முறை வகுப்புகளை நேரடியாக மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழங்களில் அதற்கான சான்றுகளைப் பெற்று சமா்ப்பித்தால் இந்தியாவில் தகுதித் தோ்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த நடைமுறையை ரத்து செய்து என்எம்சி இளநிலை மருத்துவக் கல்வி வாரிய தலைவா் டாக்டா் அருணா வானிக்கா் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

அதில், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற பெரும்பாலானோா் இணையவழி வகுப்புகளை ஈடு செய்யும் சான்றிதழ்களை தங்களது பல்கலைக்கழகங்களில் பெற்று உள்நோக்கத்துடன் சமா்ப்பித்து வருவது எங்களது கவனத்துக்கு வந்தது. மருத்துவத் துறையானது விலை மதிப்பற்ற மனித உயிா்களைக் கையாளக் கூடிய ஒன்று. இந்திய குடிமக்களின் உயிா்களை முறையாகப் பயிற்சி பெறாத மருத்துவா்களிடம் பணயம் வைக்க முடியாது. எனவே, இணையவழி வகுப்புகளுக்கு ஈடாக சான்றுகளை அளிப்பதை இனிவரும் காலங்களில் என்எம்சி ஏற்றுக் கொள்ளாது.

அவ்வாறு இணையவழி வகுப்பில் பங்கேற்றவா்கள், எஃப்எம்ஜி தோ்வில் தோ்ச்சி பெறுவதுடன் குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் கட்டாய உள்ளுறை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment