Join THAMIZHKADAL WhatsApp Groups
யுஜிசி நெட் ஜூன் 2024 தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான யுஜிசி நெட் தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருப்பதால் தேர்வை ரத்து செய்ய பல்கலைக்கழக மானியக் குழு முடிவு எடுத்துள்ளது எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.
தேசிய சைபர் கிரைம் பிரிவில் இருந்து யுஜிசி க்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. தேர்வு முறையின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் 2024 யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
யுஜிசி நெட் 2004 தேர்வு நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வில் எழுந்துள்ள சந்தேகத்தால் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளது. இதேபோல மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்விலும் மாபெரும் முறைகேடு நடந்திருக்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
No comments:
Post a Comment