14 மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் வீட்டுவசதி இல்லாதவர்களுக்கு புதிய வீடுகள் கட்டி தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
வீட்டுவசதி இல்லாதவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தருவது அரசின் தலையாய கடமையாகும். இதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மழைக்காலம் தொடங்கப் போகிறது, ஏரி, குளம், குட்டை, கண்மாய்களை தூர்வாரி, குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டு, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே தொடங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
கூட்டத்தில் பேசிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர்; முழுமையான சேதம் மற்றும் பகுதியாக சேதமடைந்த வீடுகள் என்று இருவகைப்படுத்தியுள்ளதாகவும், அதில் 1360 வீடுகள் முழுமையாக சேதமடைந்த வீடுகள் என்று கண்டறியப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் 4 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அங்கு தங்கியிருக்கும் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல மிக்சாம் புயலால் தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலமாக கடன் உதவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், மகளிர் சுய உதவி குழுவினருக்கும் அவர்களின் கடனுதவி அளவினை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment