Join THAMIZHKADAL WhatsApp Groups
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம், ஆடிப்பெருக்கு விழா மற்றும் கோட்டை மாரியம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்காது. அதேபோல கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதே நேரத்தில் மாவட்ட கருவூலம் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் செயல்படும். ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment