Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 26, 2024

பள்ளி மாணவர்களுக்கு சமூக நலத் துறைப் பணியாளர் மூலம் சீருடை வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சத்துணவு உண்ணும் மாணவ / மாணவிகளுக்கு விலையில்லா சீருடை வழங்கும் பொருட்டு , மாவட்டங்களில் செயல்படும் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் தொடர்புடைய பள்ளிகளுக்கு நேரில் சென்று அளவெடுக்கும் பணி சமூக நலத் துறையால் மேற்கொள்ளப்பட்டது . எடுக்கப்பட்ட அளவுகள் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் ( EMIS ) மூலம் உருவாக்கப்பட்ட மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

இவற்றின் அடிப்படையில் மாணவ / மாணவிகளுக்கு எடுக்கப்பட்ட அளவுகளைக் கொண்டு சீருடைகள் தைக்கும் பணி முடிந்து மாணவ / மாணவிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் 29.07.2024 முதல் தொடங்க உள்ளது . தைக்கப்பட்டிருக்கும்.

மாணவ / மாணவிகளுக்கு வழங்கப்படும் சீருடைகளில் அளவு எண்கள் தங்கள் பள்ளிகளில் அளவெடுத்த பணியாளர்கள் வந்து இச்சீருடைகளை மாணவ / மாணவிகளுக்கு வழங்க உள்ளனர் . உரிய குறிப்பிட்ட மாணவ / மாணவிகளுக்கு சரியான அளவு உள்ள சீருடைகள் வழங்கும் பணியினை . சமூக நலத் துறைப் பணியாளர்களுடன் இணைந்து மேற்கொள்ள அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News