Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) மற்றும் 305 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் கடந்த ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 80 சதவீதம் பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பையும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை ஐடிஐயில் இன்று (ஜூலை.1) முதல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்வி சான்றிதழ்களுடன் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தேர்வு செய்து சேர்ந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 9499055689 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
PG TRB ONLINE TEST LINKS
Monday, July 1, 2024
ITI Admission - ஐடிஐ-க்களில் இன்று முதல் நேரடி சேர்க்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment