Join THAMIZHKADAL WhatsApp Groups
நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி வெளியானது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது, அடுத்தடுத்த பதிவு எண்களை கொண்ட 6 பேர் முழு மதிப்பெண் பெற்றது போன்றவை நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு சென்றதால், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் இன்னும் அறிவிக்கவில்லை.
இதனிடையே நீட் தேர்வு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதில் உரிய தீர்வு கிட்டும் என எதிர்பார்ப்பதால், அடுத்த வாரத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் மாநில அரசு நடத்தும் கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியாகும்.
No comments:
Post a Comment