Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 3, 2024

1,282 தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு: பள்ளிக்கல்வித் துறை அரசாணை

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 1,282 தற்காலிக ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் சோ.மதுமதி வெளியிட்ட அரசாணை விவரம்; தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் 2011-12-ம் நிதியாண்டில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நியமனம் செய்ய 1,282 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது. இந்த தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு காலம் 2022 டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெற்றது. அதன்பின் ஊதிய கொடுப்பாணை மூலமாக இந்த பணியிடங்களில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 1,282 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.

அதையேற்று 1,282 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 2029-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை 5 ஆண்டுகளுக்கு தொடர் பணிநீட்டிப்பு வழங்கப்படுகிறது. இந்த உத்தரவை பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் அந்த ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் கால தாமதமின்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment