டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னையில் கூடியது.
*தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுக்கூட்டம் (டிட்டோஜாக்) இன்று சென்னையில் கூடியது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநிலத் தலைவர் திரு.பெ.இரா.ரவி அவர்கள் உள்ளிட்ட டிட்டோ ஜாக் இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து சங்க மாநில பொறுப்பாளர்களும் கலந்து கொண்டார்
*இன்றைய கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் இன்று இயற்றப்பட்டது.
*(1)19.9.2024, மற்றும் 20.9.2024 ஆகிய தேதிகளில் சென்னையில் அனைத்துக்கட்சி மாநில தலைவர்களை சந்தித்து டிட்டோஜாக்கின் 31 அம்சக்கோரிக்கைகளை பற்றி கூறி ஆதரவு திரட்டுவது.
*💥(2)21.9.2024, 22.9.2024 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்டம் சார்பில் அமைச்சர்களையும் பொறுப்பு அமைச்சர்களையும் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கி ஆதரவு திரட்டுவது.
*💥(3)23.9.2024,24.9.2024 ஆகிய தேதிகளில் மாவட்ட அளவில் ஆயத்தக்கூட்டங்களை நடத்துதல்.
*💥(4)29.9.2024 அன்று சென்னையில் டிட்டோஜாக் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துவது.
*💥(5)டிட்டோஜாக் சார்பில் 29.9.2024, 30.9.2024, 1.10.2024 ஆகிய மூன்று நாட்கள் டிட்டோஜாக்கின் 31 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் கோட்டை முற்றுகைப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது அனைத்து மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களின் முடிவை ஏற்று 30.9.2024,1.10.2024 ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் கோட்டை முற்றுகைப்போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் 30.9.2024 அன்று 50% மாவட்ட ஆசிரியர்களும் 1.10.2024 அன்று 50% மாவட்ட ஆசிரியர்களும் கலந்துகொள்வது எனவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.எந்த தேதியில் எந்த மாவட்டம் கலந்துகொள்வது என டிட்டோஜாக் சார்பில் இன்று பட்டியல் வெளியிடப்படும்.
*(6)சென்னையில் போராட்டம் நடத்திய 21 ஆசிரியர்கள் மீது சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கையை ரத்து செய்யவேண்டும்.மாநகராட்சியின் செயலுக்கு டிட்டோஜாக் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
*(7) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரி அவர்களுடைய மறைவுக்கு டிட்டோஜாக் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது.
*டிட்டோஜார் போராளிகளே 30.9.2024,1.10.2024 சென்னை முற்றுகைப்போராட்டத்திற்கு தயாராகுங்கள் என போர்முரசு கொட்டி அழைக்கிறோம்.
No comments:
Post a Comment