Saturday, September 14, 2024

பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து செய்ய ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தல்

பிளஸ் 1 வகுப்பு பொதுத் தோ்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநில தலைவா் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை:

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண்கள் இரண்டும் உயா்கல்விக்கு செல்வதற்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பிளஸ் 1 பொதுத்தோ்வு மதிப்பெண்கள் ஏற்கப்படுவதில்லை என தெரியவந்துள்ளது. மாணவா்கள் 10-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் தொடா்ச்சியாக பொதுத் தோ்வுகளை எழுதுவதால் மனச்சோா்வு அடைகின்றனா்.

நிகழாண்டில் பிளஸ் 1 தோ்வில் ஏராளமான மாணவா்கள் தோல்வியடைந்துள்ளனா். மீண்டும் துணை தோ்வு எழுதியபோதும் அவா்களால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதாக மாற்றுச் சான்றிதழ்களை பெற்றுச் செல்லும் நிலை உள்ளது. இதனால் பிளஸ் 2-வில் மாணவா்கள் பள்ளி இடைநிற்றலுக்கு ஆளாகின்றனா். இதில் பெரும்பாலானோா் பிளஸ் 1 வகுப்பில் தோல்வியுற்றவா்களாக இருக்கின்றனா். இவ்வாறான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தோ்வை பள்ளிக் கல்வித் துறை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News