Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 18, 2024

B.Ed மாணவர்கள் பயிற்சி பெறும் பள்ளிகள் பட்டியல் வெளியீடு



தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பி.கணேசன் அனைத்து கல்வியியல்கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2024-2025) பிஎட். 2-ம் ஆண்டு 3-வது பருவம் பயிலும் மாணவர்கள் கற்றல்- கற்பித்தல் பயிற்சிக்கு செல்ல குறிப்பிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கியுள்ளது.

மாணவர்கள் எந்த பள்ளியில்கற்றல்- கற்பித்தல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றஇந்த பள்ளிகளின் பட்டியல் ஆசிரியர்கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தபட்டியல் அனைத்து கல்வியியல் கல்லூரிகளுக்கும் கல்லூரிலாக்-இன் வாயிலாக அனுப்பிஉள்ளோம்.

வே, கல்லூரி முதல்வர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் கற்றல்- கற்பித்தல்பயிற்சியை சிறந்த முறையில் முடிக்க உரிய ஒத்துழைப்புஅளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகி்றார்கள். மாணவர்களின் வருகைப்பதிவு சம்பந்தப்பட்ட பள்ளியால் இணையவழியில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment