அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு எடுத்துள்ளது தமிழக அரசு, விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் வகுப்புகள் இயங்கக்கூடாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இன்று மிலாடி நபி விடுமுறையை முன்னிட்டு தனியார் பள்ளிகளில் வகுப்புகள் எடுக்கப்படுவதை கண்டித்து தமிழக அரசு எச்சரித்துள்ளது…
அரசு விடுமுறை நாளான இன்று தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன, மாணவர்களை சாதாரண உடைகளில் வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகும் குறிப்பாக 10 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இந்த வகுப்புகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது,
மேலும் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது, இதனை மீறி மீண்டும் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் வகுப்புகள் எடுக்கப்பட்டால் தமிழக அரசால் கண்டிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தனியார் மற்றும் அரசு சார்ந்த பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது..!!
தமிழ் அறிவோம்! " குண்டலகேசி "
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2024/09/blog-post_16.html