Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 20, 2024

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை எப்போது? - பள்ளிக்கல்வித்துறை தகவல்


6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையிலான வகுப்புகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது.

பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும், கல்வியாண்டு நாட்காட்டி வெளியிடப்படுகிறது. அந்த வகையில் கல்வியாண்டு நாட்காட்டியில் 220 வேலை நாட்கள் என்று முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனை 210 ஆக குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டியையும் கல்வித் துறை சமீபத்தில் வெளியிட்டது.

இந்த நிலையில் கல்வியாண்டு நாட்காட்டியில் தெரிவித்தபடி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான தேர்வும் தொடங்கியுள்ளது. பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகளுக்கு நேற்று தொடங்கிய நிலையில், 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையிலான வகுப்புகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. மற்ற வகுப்புகளுக்கும் தேர்வு தொடங்க உள்ளது.

மொத்தத்தில் வருகிற 27-ந்தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) காலாண்டு தேர்வை முடிக்கும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிந்ததும், வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) முதல் 2-ந்தேதி (புதன்கிழமை) வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. காலாண்டு விடுமுறைக்கு பின்னர், வருகிற 3-ந்தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது.

No comments:

Post a Comment