சர்க்கரைவள்ளி கிழங்கு சற்று இனிப்பு சுவையைக்கொண்டது. இந்த கிழங்குகளின் தோலை உரிக்காமலும் உண்ணலாம்.
இந்த கிழங்குகளை பச்சையாகவும், வேகவைத்தும் உண்ணலாம்.
வேகவைத்து உண்ணும் பொழுது இதனுடைய சுவையானது அதிகமாக இருக்கும்.
சர்க்கரைவள்ளி கிழங்கின் நன்மைகள்
சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள சத்துக்களின் காரணமாக, இதை சாப்பிடும் பொழுது ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
இரத்த அழுத்தம்
சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைத்து, சீராக வைக்க உதவும்.அதுமட்டுமல்லாமல் சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிடுவதால், இதில் உள்ள மாங்கனீசு நரம்பு, இதயம் மற்றும் இரத்தநாளங்கள் என அனைத்தும் சீராக செயல்பட உதவும்.இந்த சர்க்கரைவள்ளி கிழங்கை குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் முதல், அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.
குடல் மேலாண்மை
சர்க்கரைவள்ளி கிழங்கில் ஏராளமான நார்ச்சத்து குடலின் இயக்கத்தை மேம்படுத்த உதவும். இது குடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மையும் கொண்டது.இதனால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிடலாம். வாரம் ஒருமுறை சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிடுவது நல்லது.
இதயம்
சர்க்கரைவள்ளி கிழங்கில் ஸ்டார்ச் அதிகம் உள்ளதால், இதை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம், இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும்.அதுமற்றுமின்றி, இதயதசைகளை மேம்படுத்தவும் உதவும்.
நீரிழிவு நோய்
சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள இனிப்பு சுவையின் காரணமாக, பலர் இதை சாப்பிடக்கூடாது என நினைக்கிறார்கள்.உண்மையில், சர்க்கரை நோயாளிகளும் சர்க்கரைவள்ளி கிழங்கையை சாப்பிடலாம். சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்காது.
நோய் எதிர்ப்பு சக்தி
நமக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட முக்கியமான காரணமாக அமைவது, நோயெதிர்ப்பு சக்தி குறைப்பாட்டின் காரணமாக தான்.சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிடுவதால், இதிலுள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் பி, இரும்புச்சத்து நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
உடலின் ஆரோக்கியம்
நமது உடலின் மேற்புறத்தில் ஏதேனும் காயங்களோ, வீக்கங்களோ இருந்தால் மருந்து போட்டு சரி செய்துவிடலாம்.ஆனால் உட்பகுதியில் இருந்தால், அதை அறிவது சற்று கடினம். சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிடும் பொழுது, உடலின் உட்புறத்தில் ஏதேனும் காயங்களோ, வீக்கங்களோ இருந்தால் சரி செய்யும் தன்மை கொண்டது.சர்க்கரைவள்ளி கிழங்கு அல்சர் நோயை குணப்படுத்தும் தன்மையும் கொண்டது.
புற்றுநோய்
சர்க்கரைவள்ளி கிழங்கிற்கு வாய், மற்றும் தொண்டை புற்றுநோய்களை சரி செய்யும் தன்மை உண்டு.இது புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கும் தன்மை கொண்டது.
இளமை
சர்க்கரைவள்ளி கிழங்கு ப்ரீ-ராடிக்கல் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் இளம் வயதில் தோன்றும் சுருக்கங்களை சரிசெய்யும் தன்மை கொண்டது.இதனால் முகமானது சுருக்கங்கள் இன்றி அழகாக தெரியும். மேலும் சுருக்கங்கள் வராமல் தடுக்கவும் செய்யும்.
நுரையீரல்
நமது சுவாசத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது நுரையீரல் ஆகும். சர்க்கரைவள்ளி கிழங்கு நுரையீரலை பாதுகாக்க உதவுகிறது.நுரையீரலில் ஏற்படும் எம்ஸிமா நோயை சரிப்படுத்தும் தன்மை கொண்டது.அதுப்போல மூச்சுவிடுதலில் உள்ள சிரமங்களை சரிசெய்யும் தன்மை கொண்டது.
கருவுறுதல்
தற்போதைய சூழலில் திருமணம் ஆன பல பெண்கள் குழந்தை பிறப்பில் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.அவர்கள் அடிக்கடி சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிடும் பொழுது, இதிலுள்ள போலேட் என்னும் சத்து கரு உருவாகுவதை உறுதி செய்யும். அதுமட்டுமல்லாமல், கரு நிலைக்கவும், சத்துக்கள் குறைப்பாட்டை சரிசெய்யவும் உதவும்.
கொழுப்பு
அனைத்து கிழங்குகளிலும் சிறிதளவாது கொழுப்பு இருக்கும். ஆனால் சர்க்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு என்பது சிறிதும் இல்லை. இதன் காரணமாக, நமது உடலில் தேவையற்ற கொழுப்புகளை உடலில் சேராமல் தடுக்க உதவும் தன்மை கொண்டது.
எலும்பு
சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள கால்சியம் எலும்புகளை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல், தசைகளின் வளர்ச்சிக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கு பெரிதும் பயன்படுகிறது.
No comments:
Post a Comment