Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, November 17, 2024

தமிழ்நாடு அரசு உயர் கல்வித் துறை மாணவர்கள் நலனை முன்னிறுத்த வேண்டும்:பிரின்ஸ் கஜேந்திர பாபு


ஒரு கல்வி ஆண்டின் இடைப்பகுதியில் பேராசிரியர் பணி இட மாறுதல் என்பது கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டைப் பெரும் அளவில் பாதிக்கும். இத்தகைய நடவடிக்கை மாணவர்கள் நலனுக்கு எதிரானது.

நிரந்தர பணியில் பத்தாண்டுகளுக்கு மேலாக போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலை உள்ளது.

ஒன்று, இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே நிரந்த‌ர பணியில் இருக்கும் அரசு கல்லூரிகள் உள்ளன. மற்ற ஆசிரியர்கள் கௌரவ விரிவுரையாளராகப் பணி புரிகின்றனர்.

இத்தகையக் கல்லூரிகளில் உள்ள ஒன்றிரண்டு ஆசிரியர்கள் கூட பணி மாறுதலில் வேறு கல்லூரிக்கு சென்றுவிட்டால், அந்த இடத்தில் வேறு ஆசிரியர்கள் வருவதற்கு எந்த உத்தரவாதம் இல்லை.

ஒரு கல்லூரியில் நிரந்தர பணியில் ஆசிரியர்களே இல்லாமல் எப்படி கல்வியியல், கல்வியியல் நிர்வாக செயல்பாடு நடக்கும்?

சூழலை புரிந்துக் கொண்டு சில தியாகங்களைச் செய்ய ஆசிரியர் சமூகம் முன் வர வேண்டும்.

நிரந்தர பணியில் ஆசிரியர்களை நியமிக்க போர்க் கால அடிப்படையில் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

கல்வி ஆண்டின் நடுவே அறிவிக்கப் பட்டிருக்கும் பணி மாறுதல் நடவடிக்கையை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

அரசுக் கல்லூரியை நம்பி சேர்ந்துள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பணி மாறுதலை கல்வி ஆண்டின் இடைப்பகுதியில் நடத்தும் நடைமுறையை அரசு கைவிட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
15.11.2024.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News