Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, December 3, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.12.2024

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
திருக்குறள்: 

"பால்: பொருட்பால்

 அதிகாரம் : புல்லறிவாண்மை

 குறள் எண்: 846

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் 
குற்றம் மறையா வழி.

பொருள்:
தம்மிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காத போது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்."

பழமொழி :

Call a spade a spade

உள்ளதை உள்ளவாறு சொல்.

இரண்டொழுக்க பண்புகள் :  

 *புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன்

 *பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்

பொன்மொழி :

ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக்குரியது..- ஆப்ரகாம் லிங்கன்

பொது அறிவு : 

1. ஒருங்கிணைந்த கடல் உயிர்வாழ் பயிற்சி மையமானது எங்கு தொடங்கியுள்ளது? 

 விடை :  கோவா.        

2.  2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வணிகப் பெண்மணி விருதினை பெற்றவர் யார் ?  

   விடை: பினா மோடி 

English words & meanings :

 Lucky - அதிர்ஷடமான 

Needy - தேவையுள்ள

வேளாண்மையும் வாழ்வும் : 

 திறனுள்ள கரிம பூச்சிக் கொல்லிகளில், வேம்பு, ஸ்பினோசாட், சோப்புகள், பூண்டு, நாரத்தை எண்ணெய், காப்சைசின் (விரட்டுப் பொருள்), பேசிலஸ் பொபில்லே , ப்யூவாரியா பாசியனா மற்றும் போரிக் அமிலம் ஆகியவை அடங்கும்.


டிசம்பர் 03

பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்

உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (பன்னாட்டு ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3ஐ அனுசரிக்கின்றது.

1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.

உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன




No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News