Join THAMIZHKADAL WhatsApp Groups
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
பொருள் :
A true friend is the best possession.
உண்மையான நண்பனே உன்னதச் சொத்து
இரண்டொழுக்க பண்புகள் :
*விடுமுறை நாட்களில் வெளியில் செல்லும் பொழுது கவனமாக இருப்பேன்.
*அறிமுகம் இல்லாத நபர்களோடு வெளியில் செல்ல மாட்டேன். ஆபத்தான நீர் நிலைகளில் குளிக்க போக மாட்டேன்
பொன்மொழி :
வாய்மைக்கு மிகவும் நெருக்கமான நண்பன் அச்சமின்மையே----ஜவஹர்லால் நேரு
பொது அறிவு :
1. பூரண ஆயுள் என்பது எத்தனை ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது?
விடை: 120 ஆண்டுகள்.
2. மனித முகத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?
விடை: 14 எலும்புகள்.
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
தமிழகத்தில் சில இடங்களில் முற்றும் இயற்கை முறை வேளாண்மை நடத்தப்படுகிறது. அதாவது மழை பெய்த உடன் நெல் விதை விதைத்து விடுவது அதன் பிறகு அதன் களைகள் கொல்ல எந்த மருந்தும் இயற்கை களைக் கொல்லிகள் கூட உபயோகிப்பது இல்லை. இம்முறையில் பயிர் செய்யப் படும் பயிர்கள் இரண்டாம் மூன்றாம் தலைமுறையில் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருக்கும்.
நீதிக்கதை
சர்வீஸ்
பிரபலமான இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் தன் காரை சர்வீஸ் செய்ய மெக்கானிக் ஒருவரிடம் வந்தார்.
காரை பழுது பார்த்த மெக்கானிக், "டாக்டர், நீங்கள் செய்வதையே தான் நானும் செய்கிறேன்... நானும் வால்வுகளைப் பிரிக்கிறேன்.. பாகங்களை வெட்டி ஒட்டுகிறேன். அடைப்பை சரி செய்கிறேன். புதிய ஸ்பேர் பார்ட்ஸ் போடுகிறேன்.. நீங்களும் அதையே தான் செய்கிறீர்கள்.. அப்படி இருக்கும் போது உங்களுக்கு மட்டும் எப்படி அதிக பணம், புகழ்?"
என்று கேட்டான்.
சில வினாடிகள் மௌனம் சாதித்த டாக்டர், புன்னைகையுடன் "நீ சொன்ன வேலைகளையெல்லாம் வண்டி ஓடிக் கொண்டிருக்கும் போது செய்து பார் அப்போது புரியும்!" என்றார்.
அப்போது தான் மெக்கானிக் டாக்டரின் சர்வீஸ் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அவருடைய சர்வீஸை நம்முடைய வேலையுடன் ஒப்பிடுவது எவ்வளவு தவறான விஷயம் என்றும், புரிந்து கொண்டார்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment