Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, December 22, 2024

சென்னை சாலை போக்குவரத்துப் பயணிகள் கவனத்திற்கு!


சென்னை கோட்டூர்புரம் மத்திய கைலாஷ் சந்திப்பு ஓ.எம்.ஆர் சாலையில் பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், மத்திய கைலாஷ் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சோதனை ஓட்டம் அடிப்படையில் வரும் 22.12.2024 முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் அமுல்படுத்தப்படும்.

1. அடையாறில் இருந்து கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் மத்திய கைலாஷ் சந்திப்பில் OMR சாலை நோக்கி திருப்பி விடப்படும். அந்த வாகனங்கள் 400 மீட்டர் தூரம் சென்று தரமணி CPT பாலிடெக்னிக் கல்லுாரியின் முன்புறம் 'U' திருப்பம் அனுமதிக்கப்பட்டு, மத்திய கைலாஷ் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடைய அனுமதிக்கப்படும்.

2. கிண்டியில் இருந்து அடையாறு மற்றும் ஓ.எம்.ஆர் நோக்கி வரும் வாகனங்கள் தற்போது போலவே எந்த மாற்றும் இல்லாமல் செல்லலாம்.

3.ஓ.எம்.ஆர்-ல் இருந்து கிண்டி நோக்கி வரும் மாநகர பேருந்துகள் மத்திய கைலாஷ் கோயிலின் நியமிக்கப்பட்ட தனிப்பாதையில் அனுமதிக்கப்படும். பயணிகளை பின்புறத்தில் இறக்கிவிட

இந்த போக்குவரத்து மாற்றமானது மத்திய கைலாஷ் சந்திப்பில் காத்திருப்பு நேரத்தை குறைப்பதோடு, சீரான போக்குவரத்தையும் ஏற்படுத்த வழிவகை செய்யும்.

No comments:

Post a Comment