Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, January 27, 2025

பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த தொகுப்பூதிய பணியாளர்களுக்கு விருப்பமாறுதல், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் செய்திட கோரிக்கை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த தொகுப்பூதிய பணியாளர்களுக்கு விருப்பமாறுதல், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் செய்திட கோரிக்கை

கோரிக்கை : 1

பள்ளிக் கல்வி துறை தமிழ் நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தொகுப்பூதிய பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான விருப்ப பணி மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என கடந்த 20.10.2024 அன்று திருச்சியில் அறிவித்தார் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் ஆனால் மூன்று மாதம் காலங்கள் கடந்தும் இதுவரை கலந்தாய்வு நடத்தப்படவில்லை எனவே தொகுப்பூதிய பணியாளர்களுக்கு உடனடியாக விருப்ப பணி மாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

கோரிக்கை :2

தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊதிய உயர்வு இந்தாண்டு வழங்கப்படாமல் உள்ளது ஒன்றிய அரசு நிதி வழங்கினால் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தனது நிதியிலிருந்து இந்த ஆண்டு தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில் கோரிக்கை வைகிறோம்

கோரிக்கை - 3

பள்ளி கல்விதுறையில் 1500 முழுநேர தொகுப்பூதிய பணியாளர்கள் 10 முதல் 20 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் தொகுப்பூதிய பணியாளர்களை காலமுறை பணி நிரந்தரம் செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆவணம் செய்ய வேண்டும்.

ராஜ்குமார் கடலூர்
செயலாளர்
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - 34/2020
கடலூர் மாவட்டம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News