Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, January 6, 2025

எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகம் வழங்கப்படாததால் பாதிப்பு



தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் வழங்காததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்கப்படும். இதில் 1 முதல் 3 ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 3 பாடங்களுக்கு மட்டும் பயிற்சி நுால் வழங்கப்படும். 4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு பயிற்சி நுால்கள் வழங்கப்படும்.

மூன்றாம் பருவத்திற்காக ஜன.2ல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரும் நிலையில் பயிற்சி புத்தகங்கள் வழங்காததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment