Join THAMIZHKADAL WhatsApp Groups
தொலைதூரக் கல்வி ஜனவரி பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இக்னோ அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ, தொலைதூரக் கல்வி வாயிலாக பல்வேறு பாடங்களில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. 2025 ஜனவரி பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 28 வரை சேர்ந்து கொள்ளலாம். ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
இக்னோவில் பிஏ, பிகாம், பிஎஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment