Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு வனத்துறையில் வரைவாளர் மற்றும் இளநிலை வரைவுத் தொழில் அலுவலர் நிலையில் உள்ள 72 காலி இடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு அரசு வனத்துறை உள்ள 34 வரைவாளர் மற்றும் 38 இளநிலை வரைவு தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்க வேண்டும் என்ற வனத்துறை தலைவர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தார். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு தற்போது 72 பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment