Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 10, 2025

ஊசியுடன் வேலைக்குச் சென்ற ஆசிரியர்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ஒடிஷா மாநிலத்தில் ஆசிரியராகப் பணிபுரியும் பிரகாஷ் போய் என்பவர் IV ஊசியுடன் வேலைக்குச் சென்றிருக்கிறார்.

தாத்தாவின் இறுதிச்சடங்கிற்குச் சென்ற பின்னர் நோய்வாய்ப்பட்ட அவர் விடுப்பு நாள் வேண்டுமென பலமுறை கேட்டிருந்தார். அது மறுக்கப்பட்டதாக தெரிவித்தது.

பிரகாஷ் தமக்கு பணப் பிரச்சினைகள் இருந்ததால் வேறு வழியின்றி மருத்துவ சிகிச்சை எதுவும் நாடாமல் வேலைக்குச் சென்றதாக நம்பப்படுகிறது.

வேலைக்குச் சென்ற அவர் மருத்துவமனைக்குச் செல்ல அனுமதி கேட்டபோது பகல் 2 மணிக்குள் வேலைக்குத் திரும்புமாறு அவரது தலைமையாசிரியர் கூறியதாக India Today குறிப்பிட்டது.

மருந்து எடுத்தும் அவரது உடல்நலம் தேறவில்லை. மறுநாள் விடுப்பு நாள் கொடுக்கும்படி பிரகாஷ் மீண்டும் கேட்டிருந்தார். அது மீண்டும் மறுக்கப்பட்டது. தேர்வுக்காலத்திற்கு அவரது உதவி தேவைப்பட்டதாகத் தலைமையாசிரியர் கூறியிருந்தார். உடல் நலம் மோசமாக இருந்தும்கூட பிரகாஷ் IV ஊசியைப் பெற்றுக் கொண்டு வேலைக்குச் சென்றார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News