Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, April 28, 2025

110 விதியில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை


110 விதியில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:

பகுதிநேர ஆசிரியர்கள் இந்த வேலைக்கு சேர்ந்த இந்த 14 கல்வி ஆண்டுகளில்,

ஒருபோதும் மே மாதம் சம்பளம் மற்றும் அரசு சலுகைகள் கிடைக்கவில்லை.

தற்போது வழங்கப்படுகின்ற ரூபாய் 12,500/- என்ற குறைந்த தொகுப்பூதியத்தை வைத்து கொண்டு,

இன்றைய விலைவாசி உயர்வில்,

குடும்பத்தின் அடிப்படை தேவைகளைகூட செய்து கொள்ள முடியாமல்,

வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றார்கள்.

திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பணி நிரந்தரம் செய்தால் மட்டுமே,

பகுதிநேர ஆசிரியர்களுக்கு அரசு சலுகைகள் கிடைத்து, வாழ்வாதாரம் கிடைக்கும்.

இந்த 5 ஆண்டு சட்டசபை காலத்தின் முழு பட்ஜெட் இதுதான்.

இதில் பள்ளிக்கல்விக்கு 46,767 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த நிதியில் இருந்து காலமுறை சம்பளம் வழங்கி,
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என

கோரிக்கை மனுக்கள் போராட்டங்கள் மூலமாக வலியுறுத்தி வருகின்றார்கள்.

திமுக எதிர்கட்சியாக இருந்தபோது வலியுறுத்திய கோரிக்கையைதான் இப்போது,

அதிமுக காங்கிரஸ் பாமக விசிக பாமக மதிமுக ஓபிஎஸ் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தவாக கொமதேக மமக புரட்சி பாரதம் கட்சிகள் சட்டசபையில் வலியுறுத்தி உள்ளது.

மேலும், தேமுதிக தமாகா நாதக அமமுக எஸ்டிபிஐ மஜக தமமுக ஆம்ஆத்மீ அதிமமுக ஆதமுக உள்ளிட்ட பல கட்சிகள் மக்கள் சபையில் வலியுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையில்,

பணி நிரந்தரம் குறித்து,

முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என

பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

எனவே, பல ஆண்டுகால தொகுப்பூதியத்தை கைவிட்டு,

காலமுறை சம்பளம் வழங்கி,

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு,

பணி நிரந்தரம் என்ற திமுக வாக்குறுதியை நிறைவேற்றி,

110 விதியில் அறிவிக்க வேண்டும்.


S.செந்தில்குமார்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
செல் : 9487257203

No comments:

Post a Comment