Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 23, 2025

Engineering: "எதிர்காலம் உள்ள பொறியியல் படிப்புகள் என்னென்ன?" - +2 மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி



இந்தாண்டு 12-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் அனைத்தும் நடந்து முடிந்த நிலையில், 'கல்வி விகடன்' மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து நடத்தும் '+2க்குப் பிறகு என்ன படித்தால் எதிர்காலம்?' எனும் உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியை நடத்துகின்றன.

19.4.25 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில், 'உயர்கல்வியைத் தேர்வு செய்வது எப்படி' என்பது பற்றி தா. நெடுஞ்செழியன் அவர்கள் பேசுகிறார்.

ரமேஷ் பிரபா அவர்கள், 'எதிர்காலம் உள்ள பொறியியல் படிப்புகள்' என்பது குறித்துப் பேசுகிறார்.

நித்யா அவர்கள், 'அரசு வேலை பெறத் தேர்வு செய்ய வேண்டிய பட்டப்படிப்புகள்' குறித்துத் தெளிவுறப் பேசுகிறார்.

கலைமணி கருணாநிதி அவர்கள், 'வருங்காலத்தை ஆளப்போகும் படிப்புகள்' பற்றிப் பேசுகிறார்.

அடுத்து என்ன படிக்கலாம்?, கல்லூரியில் எந்த கோர்ஸ் சேரலாம்?, எந்தப் படிப்பு படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும்?, எங்குப் படித்தால் கிடைக்கும்? போன்ற பல்வேறு கேள்விகள் மாணவர்களிடையே இருக்கும்.

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் தெளிவு காணும் வகையில் அமைந்திருக்கும் இந்நிகழ்ச்சி சென்னை தி நகரில் இருக்கும் ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷாஷன் ஜெயின் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு நோட்டு, பேனா, காபி - ஸ்நாக்ஸ், மதிய உணவு வழங்கப்படும்.

இதில் பங்கேற்பதற்கான முன்பதிவு செய்ய மேலேயுள்ள கியூ-ஆர் கோடை ஸ்கேன் செய்யவும்.

044 - 66802907, 044 - 66802980 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு மிஸ்டு கால் செய்தும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

'https://bit.ly/KalviVikatanCareerGuidance2025' இந்த லிங்க் மூலமும் முன்பதிவு செய்து, உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்.

No comments:

Post a Comment