Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 6, 2025

தோல் (லெதர்) சம்பந்தமான படிப்புகள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இன்று இந்திய தோல் துறையில் ஒரு முக்கிய அமைப்பாக இருந்து வருகிறது. தோல் பொருட்கள் ஏற்றுமதியின் மூலம் கணிசமான அன்னியசெலாவணி தொடர்ந்து நம்நாட்டிற்கு கிடைத்துவருகிறது.

தோல் பதனிடுதல், தோல் பொருட்கள் உற்பத்தி சம்பந்தமான கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, சோதனை, வடிவமைப்பு, முன்னேற்பாடு, திட்டமிடுதல், சமூக மேம்பாடு போன்ற பணிகளில் கவனம் செலுத்த மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம்தான் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CLRI). இந்நிறுவனம் தமிழ்நாட்டில் சென்னை கிண்டியில் உள்ளது.

இந்நிறுவனத்தில் தோல் ஆராய்ச்சி சம்பந்தமான பல துறைகளோடு, இயற்பியல், வேதியியல், உயிரியல், தகவல் அறிவியல்கள் மற்றும் இன்ஜினீயரிங் அறிவியல்கள் போன்ற அறிவியல் பிரிவுகள், தத்தமது உட்பிரிவுகளோடு உள்ளன.

மேலும் இந்நிறுவனம் அகமதாபாத்,கான்பூர், ஜலந்தர், கொல்கத்தா போன்ற இடங்களில் மண்டல மையங்களையும் கொண்டுள்ளது.

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எல்.ஆர்.ஐ)

உலகின் மிகப்பெரிய தோல் (லெதர்) ஆராய்ச்சி நிறுவனமான, CSIR - CLRI எனப்படும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், 1948 ஆம் ஆண்டு ஏப்ரல்24 ஆம் நாள் சென்னையில் தொடங்கப்பட்டது.

தோல் (லெதர்) சம்பந்தமான படிப்புகளின் மீது ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு, பலவித படிப்புகளை CSIR - CLRI நடத்துகிறது. இந்த படிப்புகள், பிற கல்வி நிறுவனங்களுடன் இணைந்தோ அல்லது தனித்தோ நடத்தப்படுகின்றன. எனவே என்னென்ன படிப்புகள் மற்றும் அதற்கான விவரங்களை இங்கே பார்ப்போம்.

அகடெமிக் பாடங்கள் - தேசிய அளவிலானது:

1. பி.டெக். (தோல் தொழில்நுட்பம்)

தகுதி: 10+2 (பள்ளி உயர்நிலை மற்றும் மேல்நிலை தகுதி - MPC

காலம்: 4 வருடகள் (8 semesters)


2. பி.டெக்.(தோல் தொழில்நுட்பம்) (பகுதி நேரம்)

தகுதி: லெதர் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ

காலம்: 3½ வருடங்கள் (7 Semesters)


3. எம்.டெக். (தோல் தொழில்நுட்பம்)

தகுதி: பி.டெக்.(தோல் தொழில்நுட்பம்)

காலம்: 2 வருடங்கள் (4 Semesters)


4. எம்.டெக்.(காலணிகள் அறிவியல் & பொறியியல்)

தகுதி: பி.டெக் (லெதர் தொழில்நுட்பம்) அல்லது பி.இ. (மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்)

காலம்: 2 வருடங்கள் (4 Semesters)


5. எம்.எஸ்.(ஆய்வு படிப்பு)*

தகுதி: சம்பந்தப்பட்ட படிப்பில் பி.டெக்./பி.இ.

காலம்: 2 வருடங்கள் (4 Semesters)


6. லெதர் தொழில்நுட்பத்தில் முனைவர் படிப்பு (Ph.D.)

காலணிகள் அறிவியல் & பொறியியல்

வேறுபட்ட துறைகளின் அறிவியல் & கெமிக்கல் இன்ஜினீயரிங் படிப்பில் முனைவர் பட்டம் (அண்ணா பல்கலைக்கழகம் & மற்ற பல்கலைக்கழகங்கள்)

தகுதி: சம்பந்தப்பட்ட படிப்பில் முதுநிலை பட்டம்

UGC மற்றும் CSIR நடத்தும் NET, JRF அல்லது GATE தேர்வுகளில் தேறியவர்

காலம்: குறைந்தது: 2 வருடங்கள் அதிகபட்சம்: 6 வருடங்கள்


இந்த படிப்புகளைப் பற்றி மேலும் விவரம் அறிய,

www.clri.nic.in என்ற வலைத்தளம் செல்லவும்.


தொழில்முறை பாடங்கள்:


இந்த பாடங்கள் முழுவதும் CLRI -ஆல் மட்டுமே வடிவமைக்கப்பட்டு, திட்டமிடப்பட்டு நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகள் தொழில்முறை சம்பந்தமான தேவைகளுக்கு மிக அத்தியாவசியமானவையாக மாறியுள்ளன.

அந்த டிப்ளமோ படிப்புகளின் விவரங்கள் இங்கே விரிவாக வழங்கப்பட்டுள்ளது.

1. லெதர் ப்ராசசிங் படிப்பில் முதுநிலை டிப்ளமோ (PGDLP)

தகுதி: இளநிலை படிப்பில் அறிவியல் பாடத்தில் 50% மதிப்பெண் இருக்க வேண்டும். வேதியியலும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்

காலம்: 52 வாரங்கள்

2. லெதர் ப்ராசசிங் படிப்பில் டிப்ளமோ

தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் அல்லது சமமான தேர்வுகளில் 50% மதிப்பெண் இருக்க வேண்டும்

காலம்: 52 வாரங்கள்

3. லெதர் பொருட்கள் சம்பந்தமான டிப்ளமோ படிப்பு

தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் அல்லது அதற்கு சமமான தேர்வுகளில் 50% மதிப்பெண் இருக்க வேண்டும்

காலம்: 52 வாரங்கள்/

4. லெதர் கார்மென்ட் படிப்பில் டிப்ளமோ

தகுதி: 10 , 12 ஆம் வகுப்பு தேர்வுகள் அல்லது அதற்கு சமமான தேர்வுகளில் 50% மதிப்பெண் இருக்க வேண்டும்

காலம்: 52 வாரங்கள்

5. காலணிகள் சம்பந்தமான படிப்பில் டிப்ளமோ

தகுதி: 10 , 12 ஆம் வகுப்பு தேர்வுகள் அல்லது அதற்கு சமமான தேர்வுகளில் 50% மதிப்பெண் இருக்க வேண்டும்

காலம்: 52 வாரங்கள்/

இந்த படிப்பு விபரங்களை மேலும் அறிய www.clri.nic.in

என்ற வலைத்தளம் செல்லவும்.

கூடுதல் தகவல்களுக்கு: For Further Information Please Contact

Head, Centre for Human & Organisational Resources Development

CSIR-Central Leather Research Institute,

Adyar, Chennai - 600 020

Tel: +91 44 24437109

E-mail: chord@clri.res.in


*****

சென்னை தரமணி, சி.ஐ.டி., வளாகத்தில் உள்ள, அரசு தோல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 106 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதில், மூன்றரை ஆண்டு டிப்ளமா படிப்பு நடத்தப்படுகிறது. இதில் சேரும் மாணவர்களுக்கு இலவச 'பஸ் பாஸ், லேப்டாப்' மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த கல்லுாரியில் படித்த பலர், தொழில் அதிபர்களாக மாறியுள்ளனர். பலர் அதிக ஊதியத்துடன், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். இந்த கல்லுாரியில் படிக்கும் மாணவர்களுக்கு, வளாக நேர்காணல் நடத்தப்பட்டு, தோல் பொருட்கள் தயாரிப்பு ஆலைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. வேதியியல் தொழிற்சாலையிலும் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த படிப்பை முடிக்கும் மாணவர்கள், அண்ணா பல்கலையில், பி.டெக்., - எம்.டெக்., படிப்புகளையும் மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News