Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 6, 2025

வேலைவாய்ப்புகள் நிறைந்த பொறியியல் படிப்புகள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் (ECE)

பொறியியல் படிப்புகளில் இன்றைக்கும்கூட, பல மாணவர்களின் முதல் சாய்ஸாக இருப்பது எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங். எலெக்ட்ரானிக்

சர்க்கியூட், டிஜிட்டல் எலெக்ட்ரானிக்ஸ், டிஜிட்டல் சிக்னல் புராசசிங், பவர் எலெக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிக்கேஷன், மைக்ரோபுராசஸர்ஸ், எலெக்ட்ரோமாக்னடிக் பீல்டு தியரி, நெட்வொர்க் அனாலிசிஸ், எலெக்ட்ரானிக் டிவைஸ் அண்ட்

சர்க்யூட், சிக்னல்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ், கண்ட்ரோல் சிஸ்டம்ஸ், எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் ஃபண்டமென்டல், கன்ட்ரோல்

சிஸ்டம்ஸ், விஎல்எஸ்ஐ, வில்ஹெச்டிஎல் உள்ளிட்ட பாடங்கள் கற்றுத்தரப்படும். இப்படிப்பை முடித்த மாணவர்கள் எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிக்கேஷன் துறைகளில் மட்டுமல்லாமல், தகவல் தொழில்நுட்பத் துறைகளிலும் வேலைக்குச் சேருகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களான பாரத் மிகுமின் நிறுவனம், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இந்திய விண்வெளி ஆய்வு மையம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனம், இந்தியப் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி அமைப்பு, விமானப் பிரிவு, கடற்பிரிவு மற்றும் பாதுகாப்புத் துறை, சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இந்திய ரயில்வே, அணுமின் நிலையங்கள், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் உள்பட பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சிவில் என்ஜினீயரிங் (Civil)

பொறியியல் துறையின் முன்னோடிப் படிப்பு சிவில் என்ஜினீயரிங். இந்தப் படிப்பில் கட்டுமானப் பொருட்கள் குறித்தும், கட்டடங்களின் வடிவமைப்பு, கட்டுமானத் திட்டமிடல் மற்றும் பராமரிப்புப் பணிகள் என பல்வேறு விஷயங்கள் கற்றுத்தரப்படுகின்றன. மத்திய மற்றும் மாநில அரசு பல திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் தேசிய நெடுஞ்சாலைகள், கிராம சாலைகள் மேம்பாடு, விமான நிலையங்கள் விஸ்தரிப்பு, ரயில் பாதைகள் விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டங்கள், துறைமுகங்கள், பாசனக் கால்வாய்கள் மற்றும் வடிகால் மேம்பாடு, மின்னாற்றல் நிலையங்கள், மின்சார டவர்கள் எனப் பல்வேறு பணிகள் நடந்துவருகின்றன. கூடுதலாக சிறப்பு சேர்க்கிறது மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம். தனியார் நிறுவனங்களும் பல பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் எனப் பல கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு வருகின்றன. இதனால், சிவில் என்ஜினீயரிங் படித்த மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதில் பிரச்சினை இருக்காது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் (CSE)

கம்ப்யூட்டர் ஹார்டுவேர், புரோகிராமிங் மொழிகள், வடிவமைப்பு, கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங், கம்ப்யூட்டர் வரைவியல், கம்ப்யூட்டர் பொறியியல், டிஜிட்டல் சிஸ்டம்ஸ் போன்ற கம்ப்யூட்டர் துறைக்குத் தேவையான முக்கியப் பாடங்கள் இந்த மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன. அதாவது கம்ப்யூட்டர் வடிவமைப்பு, உருவாக்கம், செயல்பாடுகள் ஆகிய துறைகளில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் மொழிகளிலும் கம்ப்யூட்டர் டூல்களில் நல்ல பயிற்சி உள்ள மாணவர்களுக்கு வேலை கிடைக்கும். அதனால்தான், மாணவர்கள் கல்லூரிப் படிப்பைத் தாண்டியும் கம்ப்யூட்டர் தொடர்பான சில பயிற்சிகளையும் சான்றிதழ் தேர்வுகளையும் எழுதி தங்களை வேலைவாய்ப்புக்குத் தகுதிப்படுத்திக்கொள்கிறார்கள்.

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (IT)

கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் (CSE) படிப்பிற்கும் ஐ.டி. என்று அழைக்கப்படும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படிப்புக்கும் இடையே அதிக வித்தியாசங்கள் இல்லை. கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் துறையின் உடன்பிறப்பு இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி. கம்ப்யூட்டர் தகவல் தொடர்பான தொழில்நுட்பங்களும் பயன்பாட்டுக்கு ஏற்ப அந்தத் தொழில்நுட்பங்களைக் கையாளுவது குறித்தும் உள்ள படிப்புதான் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி. எனவே, நல்ல கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் இடமில்லை, ஐ.டி. படிப்பில் இடம் இருக்கிறது என்றால் அதில் சேரலாம். வளர்ந்துவரும், தொடர்ந்து வளரப் போகும் முக்கிய துறை. அதனால், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படித்த திறமையான மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்குப் பஞ்சமில்லை.

ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்

மாணவர்களிடம் பிரபலமான படிப்புகளில் ஒன்று ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங். விமானங்களை உருவாக்குவதிலும், அதனை பராமரிப்பதிலும் ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயர்களின் பங்கு முக்கியமானது. விமானப் பொறியியல் என்ற நிலையிலிருந்து மாறி, செயற்கைக்கோள், ஏவுகணை, ராக்கெட்... என ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளின் எல்லைகள் விரிவடைந்து வருகின்றன. ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்பவர்களுக்கு

சர்வதேச அளவில் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன. பாதுகாப்புத் துறை, விண்வெளி ஆராய்ச்சித் துறை, நேஷனல் ஏரோநாட்டிக்கல் லேபரட்டரி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் போன்ற நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது.

ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்

மெக்கானிக்கல் என்ஜினீயரிங்கின் ஒரு பகுதியாக இருந்த ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் காலப்போக்கில் தனித்துறையாக உருவெடுத்துள்ளது. வாகனங்களை வடிவமைப்பது, தயாரிப்பது, இயக்குவது, கருவிகள் செயல்பாட்டினை பரிசோதனை செய்வது, பாகங்களைப் பொருத்துவது, பராமரிப்பது ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள சாதனங்களை மேம்படுத்துவது போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியது இந்தப் படிப்பு. மோட்டார் வாகன உற்பத்தி நிலையங்கள் மட்டுமல்லாமல் அரசுப் போக்குவரத்து நிறுவனங்களிலும் பாதுகாப்புத் துறையிலும்கூட வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

ஜியோ இன்பர்மேட்டிக்ஸ்

நில அளவை முதல், விண்ணில் செயற்கைக்கோள் நிலைநிறுத்துதல் வரை ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் பயன்பாடு இருக்கிறது. இது தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய புவி தகவல் அமைப்புப் பிரிவு என்று சொல்லலாம். இந்தப் படிப்பில் புவி வரைபடவியலும், ரிமோட் சென்சிங்

என்றழைக்கப்படும் தொலைஉணர்வு பாடங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

பாதுகாப்புத் துறை, நகர நிர்வாக அமைப்புகள், தொலை உணர்வு ஆராய்ச்சி அமைப்புகளிலும் வேலை கிடைக்கும். தற்போது பல மென்பொருள் நிறுவனங்களுக்கு நிலவரைபடவியல்

சார்ந்த திட்டப்பணிகள் கிடைப்பதால் இருக்கிறது. மென்பொருள் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு சாத்தியங்கள் உள்ளன. இப்படிப்பை முடிப்பவர்களுக்கு பொதுத் துறை அமைப்புகளான இஸ்ரோ, தேசிய தொலை உணர்வு மையம், தேசிய நில அளவை தகவல் அமைப்பு, இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரிமோட் சென்சிங், இந்திய கடல் தகவல் மையம் (இன்காய்ஸ்), வன நில அளவைத் துறை, புவியியல் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, பாதுகாப்புத் துறை, சுற்றுச்சூழல் துறை, தேசிய தகவலியல் மையம், இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம், வானிலை மையங்கள், கனிமத் துறை, நீலத்தடி நீர் மேலாண்மைப் பிரிவு, பேரிடர் மேலாண்மை, நகர மேம்பாடு, கட்டுமான வடிவமைப்பு, இந்திய புவி ஆய்வியல் துறை, பெட்ரோலியம், கனிமத் துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் (EEE)

எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறைகளில் உள்ள பாடங்கள் இருக்கும். இப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு அணுமின் நிலையங்கள், நீர்மின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள் போன்ற மின் உற்பத்தி நிலையங்கள், மின்சார வாரியங்கள் போன்ற பல்வேறு அமைப்புகளில் வேலைவாய்ப்பு இருக்கிறது. இதேபோல, எலெக்ட்ரானிக்ஸ் தொழில் நிறுவனங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும்.

எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் என்ஜினீயரிங்

இன்ஸ்ட்ருமென்டேஷன் என்ஜினீயரிங் என்பது உற்பத்தி மற்றும் தயாரிப்பில் அறிவியல் கட்டுப்பாட்டுச் செயலியாக செயல்படுகிறது. ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் செயல்நிலைக் கட்டுப்பாடு, சரியான வகையில் மூலப்பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் தானியங்கி முறையில் செயல்படுத்தல் போன்ற செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பு இன்ஸ்ட்ருமென்டேஷன் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு இருக்கும். கருவிகளின் வடிவமைப்பு, கட்டமைப்பு, தர சோதனை, பராமரிப்பு, சீர் செய்தல், தானியங்கிக் கருவியை இயக்குதல், உற்பத்தியைக் கவனித்தல் போன்ற பணிகளும் இருக்கும். இதற்கேற்ப எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மோட்டார்ஸ் மற்றும் கண்ட்ரோலர்ஸ், புரோகிராம் கண்ட்ரோலர்ஸ், ரோபோட்டிக், இன்டர்பேஸ் டெக்னாலஜி போன்ற பல்வேறு விஷயங்களை இந்தப் படிப்பில் படிக்கிறார்கள். உற்பத்தி நிறுவனங்கள், உயிரி மருந்தியல் நிறுவனங்கள், ரயில்வே துறை, விமானப் போக்குவரத்துத் துறை, தொலைத்தொடர்புத்துறை, பாதுகாப்புத் துறைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் இப்படிப்பை படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அக்ரிகல்ச்சுரல் அண்ட் இர்ரிகேஷன் என்ஜினீயரிங்

வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங்கள் வந்துள்ள சூழ்நிலையில் வேளாண் மற்றும் பாசனப் பொறியியல் துறை முக்கியத்துவம் பெற்றுள்ளது. வேளாண் உற்பத்தியை அதிகரித்தல், பாசன மற்றும் வடிகால்

வசதியினை மேம்படுத்துதல், நீர்வள மேலாண்மை மேம்பாடு, மண்வளத்தை சீர் செய்தல், வேளாண் தொழில்நுட்பச் சாதனங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும் வடிவமைப்பு, விளைச்சலுக்குப் பிந்தைய தொழில்நுட்பம், விவசாயப் பொருட்களை நீண்ட காலத்துக்குப் பாதுகாத்துப் பயன்படுத்துதல், வேளாண் பண்ணை மேலாண்மை, விதை தொழில்நுட்பப் பயன்பாடு, வேளாண்மைப் பொருளாதாரம் போன்றவற்றை உள்ளடக்கியது இந்தப் படிப்பு.

வேளாண்மை விரிவாக்கப் பணிகள், வேளாண் சார்ந்த வங்கிப் பணிகள், தோட்டக்கலைப் பணிகள், வேளாண் கல்வி, வேளாண் விற்பனை மற்றும் ஏற்றுமதி, மண் வளப் பாதுகாப்பு, வேளாண்மை தொடர்பான கருவிகள் உருவாக்கம் என விரிந்த வேலைவாய்ப்புத் தளங்களைக் கொண்டது இப்படிப்பு.

அரசின் வேளாண் துறை, வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், பாசனப் பொறியியல் துறை, வேளாண் கருவி தயாரிப்பு நிறுவனங்கள், வங்கிகள், வேளாண் கூட்டுறவு சங்கங்கள், உரம் மற்றும் நீர்ப்பாசன கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள்,

சக்கரை ஆலைகள் போன்றவற்றில் வேலைவாய்ப்பு பெறலாம். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலும்,

சர்வதேச நிறுவனங்களின் திட்டப்பணிகளிலும் வேலை கிடைக்கும் சாத்தியம் உள்ளது.

பயோ டெக்னாலஜி

இந்த நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அடுத்தபடியாக வளர்ந்துவரும் முக்கியத்துறை பயோ டெக்னாலஜி. விவசாயம், மருந்துப் பொருள்கள், பதனீட்டு உணவுகள், ஜவுளித்துறை... இப்படி இதன் பயன்பாடு விரிந்துவருகிறது. எனவே, இதுகுறித்த படிப்புகள் உலகெங்கிலும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. உயிரியல் தொழில்நுட்பம், ஜெனட்டிக்ஸ், உயிரி வேதியியல், நுண்ணுயிரியல் போன்ற பிரிவுகள் குறித்த படிப்பு இது.

பயோ டெக்னாலஜி படித்த மாணவர்களுக்கு பார்மாசூட்டிக்கல் நிறுவனங்கள், வேளாண் நிறுவனங்கள், கால்நடை மருத்துவ அறிவியல் நிறுவனங்கள், உணவுப் பதனீட்டு நிறுவனங்கள், ஜவுளித்துறை அமைப்புகள், பயோ எரிபொருள் உற்பத்தி நிறுவனங்கள், பயோடெக் ஆய்வு நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்பு கிடைக்கும். விப்ரோ, டி.சி.எஸ்., இன்போசிஸ் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட பி.டெக்., பயோ டெக்னாலஜி மாணவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்கின்றன.

மைனிங் என்ஜினீயரிங்

உலோகத் தாது மற்றும் உலோகம் அல்லாத பொருட்களிலிருந்து உலோகத்தையும், திட எரி பொருளையும் பிரித்தெடுக்கும் முறை குறித்தும், அதற்கான உத்திகள் குறித்தும் கற்றுத்தரும் படிப்பு சுரங்கப் பொறியியல் படிப்பைப் படித்தவர்களுக்கு பொதுத்துறை மற்றும் தனியார் துறை கனிமவள நிறுவனங்களிலும் புவியியல் துறைகளிலும் ஆராய்ச்சித் துறைகளிலும் வேலை கிடைக்கும்.

கெமிக்கல் என்ஜினீயரிங்

கெமிக்கல் என்ஜினீயரிங் தவிர்க்கமுடியாத முக்கிய துறை. உரம், பெட்ரோலியப் பொருட்கள், சிமெண்ட், மருந்துகள், பெயிண்டுகள், செயற்கை நூலிழைகள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கத் தேவையான இயந்திரங்களை வடிவமைப்பது, தொழில்நுட்பங்களை உருவாக்குவது உள்ளிட்டவை இப்படிப்பின் முக்கிய அம்சங்கள். மாசுக்கட்டுப்பாட்டுத் துறையிலும் இப்படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்கு அறிமுகம் இருக்கும்.

பெட்ரோலிய, எரிவாயு சுத்திகரிப்பு நிறுவனங்கள், உர நிறுவனங்கள், பார்மாசூட்டிக்கல்ஸ், உரத்தொழிற்

சாலைகள், ரப்பர் அண்ட் பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்கள், பெயிண்ட் மற்றும் காகித உற்பத்தி நிறுவனங்கள், ஃபுட் புராசசிங் நிறுவனங்கள், ரசாயன ஆலைகள் போன்றவற்றில் கெமிக்கல் என்ஜினீயரிங் தொடர்பான படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைக்கும். அத்துடன் விண்வெளி, அணுசக்தி, பாதுகாப்புத் துறைகளிலும் வேலைவாய்ப்புகள் உண்டு.

பெட்ரோலியம் ரீபைனிங் அண்ட் பெட்ரோ கெமிக்கல் என்ஜினீயரிங்

பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு பிரித்தெடுப்பு, உற்பத்தி, சுத்திகரிப்பு மற்றும் உபரிப் பொருட்கள் தயாரிப்பு, பெட்ரோலியம் எடுப்பதற்கான கருவிகள், அதன் செயல்பாடுகள், சுத்திகரிப்பு முறைகள், அதற்கான சாதனங்களின் செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது. உலகெங்கிலும் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்களின் தேவையும், பயன்பாடும் அதிகரித்திருப்பதால் இந்தப் படிப்பினைப் படிப்பவர்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. பெட்ரோலியம், இயற்கை எரிவாயு நிறுவனங்களில் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். வெளிநாடுகளில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு பெறமுடியும்.

இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங்

தற்காலத் தொழிற்துறையினரின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மாணவர்களைத் தயார் செய்வதற்காக இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் போன்ற பிரத்யேகப் பட்டப்படிப்புகள் தேவைப்படுகின்றன. தொழிற்

சாலைகளில் உள்ள இயந்திரங்களையும் பணிபுரியும் மனிதர்களையும் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவது எப்படி என்று கற்றுத்தரும் படிப்பு இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையைப் போன்றதே இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் துறை என்றாலும், தொழிற்

சாலைகளில் உருவாகும் பொருட்களின் உற்பத்தி முறைகள், அதற்குப் பயன்படும் சாதனங்கள், அவற்றை ஆராய்ந்து தெரிவுசெய்யும் வழிகள், மேலாண்மை நெறிகள், கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டுச்

சாதனங்கள் போன்றவை இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங்கில் கற்றுத்தரப்படுகின்றன.

அரசுத் துறை, தனியார் துறைத் தொழிற்சாலைகளிலும் கன்ஸல்டன்சி நிறுவனங்களிலும் இப்படிப்பை படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

மானுபாக்சரிங் என்ஜினீயரிங்

தொழில் நிறுவனங்களில் உற்பத்தியைக் கண்காணிக்கும் பணியில் மானுபாக்சரிங் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. தயாரிப்பின் தரம், உற்பத்திச் செலவு குறைவு, உற்பத்தி அதிகரிப்பு, உற்பத்திக்கு ஏற்ற தொழில்நுட்பங்கள், உற்பத்தி மேலாண்மை... இப்படி பல்வேறு அம்சங்களிலும் இவர்கள் கவனம் செலுத்தவேண்டியிருக்கும். இந்தப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு தொழில் உற்பத்தி நிறுவனங்களிலும் இயந்திர சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு உண்டு.

புரொடக்ஷன் என்ஜினீயரிங்

ஒவ்வொரு பொருள் தயாரிப்பும் சிக்கலான முறைகளைக் கொண்டிருக்கும். அதனைத் திட்டமிட்டு, முறைப்படுத்தி, தயாரிப்பு முறைகளைச் செயல்படுத்துவது புரொடக்ஷன் என்ஜினீயர்களின் பணியாகும். அதாவது, பொறியியல் தொழில்நுட்பத்துடன் மேலாண்மை

சவால்களும் கொண்ட பணி இது. உற்பத்திக்குத் தேவையான இயந்திரங்கள் எவை என்பதிலிருந்து தயாரிப்புக்கான மாதிரிகளை வடிவமைத்து குறைந்த செலவில் உற்பத்தி செய்வது, அதனை சோதனை செய்வது, மதிப்பீடு செய்வது போன்ற பணிகளும் இவர்களுக்கு உண்டு. பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்கள், வீட்டுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் உள்பட பல்வேறு உற்பத்தி நிறுவனங்களில் இந்தப் படிப்பைப் படித்தவர்கள் வேலைவாய்ப்பை பெறலாம்.

மெரைன் என்ஜினீயரிங்

பயணிகளுக்கான கப்பல்கள், சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ஆகியவற்றின் இயக்கம் குறித்த பல்வேறு பயிற்சிகளை உள்ளடக்கியது இப்படிப்பு. கப்பலில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட் ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சார்ந்த பல்வேறு சாதனங்களை இயக்கவும் பழுதுபார்க்கவும் கற்றுத்தரப்படும். மாணவர்களுக்கு கப்பலில் நேரடிப் பயிற்சியும் அளிக்கப்படும். இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஷிப்பிங் விதிமுறைகளின்படி உடற்தகுதியும் உரிய பார்வைத் திறனும் இருக்கவேண்டியது அவசியம்.

மெகட்ரானிக்ஸ்

காலத்துக்கேற்ற வகையில் புதிதாக வந்துள்ள பொறியியல் படிப்பு மெகட்ரானிக்ஸ். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையில் எலெக்ட்ரானிக்ஸ் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளின் இணைவுதான் மெகட்ரானிக்ஸ். உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்களில் மட்டுமல்லாமல், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் இப்படிப்பைப் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கிறது.

பயோமெடிக்கல் என்ஜினீயரிங்

இது பொறியியலும் மருத்துவமும் கலந்த படிப்பு. மருத்துவத்துறைக்குத் தேவையான உபகரணங்களை வடிவமைத்தல், தயாரித்தல், பராமரித்தல், கருவிகளின் இயக்கத்துக்குத் தகுந்த மென்பொருள் உருவாக்கம் போன்ற பணிகளுக்கு ஏற்ற வகையில் தகுந்த தொழில்நுட்பத் திறன் கொண்ட பொறியாளர்களை உருவாக்கும் நோக்கில் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படிப்பு உள்ளது. இப்படிப்பை முடித்தவர்களுக்கு கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும்

மருத்துவ சாதனத் தயாரிப்பு நிறுவனங்களிலும் மருத்துவக் கருவி ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும்.

மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங்

பல்வேறு உலோகத் தாதுக்களிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல், செம்மைப்படுத்துதல், உலோகங்களைக் கலந்து உலோகக் கலவைகளை உருவாக்குதல், வடித்தெடுத்தல் உள்பட உலோகவியல், பொறியியல் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள் இப்படிப்பில் கற்றுத்தரப்படும். அரசு பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், ஆய்வுக் கூடங்கள் ஆகியவற்றில் இப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்கும்.

ரப்பர் அண்ட் பிளாஸ்டிக் டெக்னாலஜி என்ஜினீயரிங்

வாகன உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க... ரப்பரின் பயன்பாடும் தொழிற்சாலைகளில் அதிகரித்திருக்கிறது. இதனால், ரப்பர் தொழில்நுட்பமும் முக்கியமான பிரிவுகளில் ஒன்றாக மாறி இருக்கிறது. இதேபோல, பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகமும் இத்துறை சார்ந்த தொழில்நுட்பத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியுள்ளது. இதுகுறித்த தொழில்நுட்பங்கள், தயாரிப்பு முறைகள், ஏற்கென@வ பயன்படுத்தப்பட்ட பொருள்களை மறு சுழற்சி செய்து பயன்படுத்துதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் படிப்பு இது. டயர் தயாரிப்பில் ரப்பர் முக்கியத்துவம் வகிப்பதால் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் இந்தப் படிப்பை படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். இதேபோல, பிளாஸ்டிக் தொடர்பான தொழில் நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News