Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 21, 2025

அறிவியல் பாடத்தில் மாணவர்களுக்கு ஆர்வம் குறைவதாக ஆசிரியர்கள் கவலை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

பிளஸ் 1 மாணவர் சேர்க்கை, அனைத்து பள்ளிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான மாணவர்கள், அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களைத் தேர்வு செய்ய அதிக ஆர்வம் காட்டவில்லை என தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.

கோவையில் செயல்படும் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கு வருபவர்கள், உயிரியல், பியூர் சயின்ஸ், மைக்ரோ பயாலஜி உள்ளிட்ட அறிவியல் பிரிவுகளைத் தவிர்க்கின்றனர். தனியார் பள்ளிகளிலும் இதே நிலைதான் என்று கூறப்படுகிறது.

ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'இன்று மாணவர்கள் கஷ்டப்பட விரும்பவில்லையோ என தோன்றுகிறது. 460க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களும், அறிவியல் பிரிவைத் தேர்ந்தெடுக்க மறுக்கின்றனர்.

இந்தப் பிரிவுகளை எடுத்து படித்தால், ஆராய்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் பணி வாய்ப்புகள் உள்ளன என்று விளக்கினாலும், ஏற்க தயாராக இல்லை. 50 மாணவர்களில் சுமார் 10 பேர் மட்டுமே அறிவியல் பாடங்களைத் தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்' என்றார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News