Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 13, 2025

தமிழகத்தில் மொத்தம் எத்தனை எம்.பி.பி.எஸ் இடங்கள்? பொது கலந்தாய்வுக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும்?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
NEET UG 2025 MBBS seat matrix: தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 92.5% பொது கலந்தாய்வுக்கு எத்தனை எம்.பி.பி.எஸ் இடங்கள் கிடைக்கும்? 

நீட் தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் எத்தனை எம்.பி.பி.எஸ் இடங்கள் இருக்கின்றன என்பதை இப்போது பார்ப்போம்.

இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (NEET UG 2025) மே 4 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தகுதி பெறுவது அவசியம்.

இதில் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு மவுசு அதிகம். தமிழகத்தைப் பொறுத்தவரை எம்.பி.பி.எஸ் இடங்களைப் பெற கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக குறைந்த கட்டணம் காரணமாக அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் பெற மாணவர்கள் தீவிரமாக முயற்சிக்கின்றனர்.

இந்தநிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் எத்தனை எம்.பி.பி.எஸ் இடங்கள் இருக்கின்றன என்பதை பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் கல்வி ஆலோசகர் செந்தில்நாதன் விளக்கியுள்ளார்.

வீடியோவின்படி, தேசிய மருத்துவ ஆணையம் ஏப்ரல் 4 ஆம் தேதி இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் இடங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி உட்பட 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. 22 தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் 4 தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் மொத்தம் 4050 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 9250 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.

இவற்றில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கிற்கு 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 92.5% பொதுக் கலந்தாய்வுக்கு 3950 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில் 79 இடங்கள் விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட சிறப்புக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். ஈ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரியில் 91 இடங்கள் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

22 தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஓதுக்கீட்டுக்கு மொத்தம் 1843 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. 4 தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் அரசு ஓதுக்கீட்டுக்கு மொத்தம் 268 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.

ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கின் பொதுக் கலந்தாய்வு 6152 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.

இதுதவிர தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் 1459 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News