Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 6, 2025

500 ரூபாய் நோட்டும் திரும்பப் பெறப்படுமா? ஆர்பிஐ அறிவிப்பால் குழப்பம்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

விரைவில் ஏடிஎம்களில் ரூ.100, ரூ.200 தாள்கள் அதிகம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று ஆர்பிஐ அண்மையில் அறிவித்திருந்த நிலையில், ரூ.2,000-ஐப் போல, 500 ரூபாய் நோட்டும் திரும்பப் பெறப்படுமா என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு செப்டம்பர் இறுதிக்குள், பணப்புழக்கத்தில் ரூ.500 ரூபாய் நோட்டுகளை விட, மதிப்புக் குறைந்த ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் அதிகம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆர்பிஐ தெரிவித்திருந்த நிலையில் இந்த சந்தேகம் வலுவடைந்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் அனைத்துமே பணப்புழக்கத்தில் இருக்கும் ரூ.500 நோட்டுகளைக் குறைப்பதாகவே பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது ஏடிஎம்களில் 75 சதவீதம் ரூ.500 நோட்டுகள்தான் கிடைக்கிறது. ஆனால், இனி அதிகளவில் ரூ.200 மற்றும் ரூ.100 நோட்டுகள்தான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், கருப்புப் பணம் அதிகரித்ததால்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது கடந்த ஆண்டுகளை விடவும் கடந்த 2024ஆம் ஆண்டில், ரூ.500 கள்ள நோட்டுப் புழக்கம் 36 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் ஆர்பிஐ சுட்டிக்காட்டியிருக்கிறது.

எனவே, கள்ள நோட்டுகளை ஒழிக்க ரூ.500 நோட்டு பணமதிப்பிழப்பு செய்யப்படுமா என்ற கேள்வியும் மக்களிடைய எழுந்துள்ளது.

தற்போது ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்பட்டுவிட்டதால், அதிகபட்ச பணமதிப்புக் கொண்ட ரூபாய் நோட்டாக ரூ.500 தான் உள்ளது. எனவே, அதனையும் பணமதிப்பிழக்கம் செய்துவிட்டால், பெரிய அளவில் பணப்பரிமாற்றம், பணப்புழக்கம் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க.. பிரியாணியும் பொரிச்ச கோழியும்.. சிறுவன் ஆசை நிறைவேறியது! கேரள அங்கன்வாடி மெனு மாற்றம்!!

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் கடந்த 2023ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஏடிஎம்களில் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும், பழப்புழக்கத்தில் எளிதாக இருக்கும் குறைந்த மதிப்புள்ள நோட்டுகளின் புழக்கமும் அதிகமாக இருப்பது மக்களுக்கு எளிதாக இருக்கும் என்று மட்டுமே ஆர்பிஐ தெரிவித்திருப்பதாகவும் விளக்கம் கொடுக்கப்படுகிறது.

எனவே, 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது குறித்து ஆர்பிஐ தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News