Join THAMIZHKADAL WhatsApp Groups

ஒரு விதை, சிறிய செடியாக வளர்ந்து வளர்ந்து மரமாகிறது. அதோடு அதன் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை, அந்த மரம் பூக்கிறது, பூ பிஞ்சாக மாறுகிறது, பிஞ்சு காயாக மாறுகிறது, அதோடும் அதன் செயல் பாடு நின்று விடுவதில்லை. காய் பழமாக மாறுகிறது.
பழத்தோடும் அதன் செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதில்லை. அது அதன் மேல் ஒரு வித வண்ணத்தை உருவாக்குகிறது. அந்த வண்ணம் ஒரு வாசனையைப் பரப்புகிறது. அதன் மூலம் பிற உயிரினங்களை ஈர்க்கிறது.
இதெல்லாம் ஏன் நடைபெறுகிறது? இந்தப் பரிணாம மாற்றங்களின் தேவை என்ன? வேறு ஒன்றுமில்லை வண்ணத்தின் மூலமாகவும், அது வெளிப்படுத்தும் வாசத்தின் மூலமாக வும், பறவைகளையும், குரங்கு, அணில் போன்ற விலங்குகளையும் அந்தப் பழம் தனது வாசனையின் மூலம் அழைப்பு விடுகிறது.
இந்த அழைப்பின் மூலம், வா வந்து என்னை தின்று விட்டு கொட்டையை கீழே போடு என்பது தான் இந்த பரிமாண மாற்றம் மற்றும் அழைப்பின் நோக்கம்.
கீழே விழுந்த கொட்டை மீண்டும் முளைக்கிறது, செடியாக, மரமாக, பூவாக, காயாக, கனியாக. விலங்கு களும், பறவைகளும் இதன் மூலம் பசியாறுவது மட்டுமல்லாமல், இது மறு முளைப்பிற்கான ஒரு செயல் பாடு, இது ஒரு வாழ்க்கைச் சுழற்சி.
இந்தப் பரிமாணத் தத்துவம் செடி, மரம், கொடி, விலங்கு, பூச்சி, புழுவுக்கு மட்டு மல்ல, மனிதனும் இந்தப் பரிமாணத் தத்துவச் சுழற்சிக்கு உட்பட்டவன்தான். இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்க ளும் இந்தச் சுழற்சிக்கு உட்பட்டது தான்.
ஆணும், பெண்ணும்கூட இப்படியான வாசத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள் தான். இந்த பூமியில் உள்ள உயிரி னங்களின் அதிகப்பட்சக் கொள்கையே மறுமுளைப்புத்தான்.
நாம் வேண்டுமானால் ஆறறிவு, மேம்பட்டவன், மனிதன், உயர்ந்தவன் என்றெல்லாம் ஜம்பம் அடித்துக் கொள்ளலாம். ஆனால் அறிவியல் நம்மையும் ஒரு உயிரியாகத்தான் அணுகுகிறது. இந்த அடிப்படையில், மறு முளைப்பிற்காகத்தான் உலகத் தில் உள்ள அனைத்து உயிரிகளும் உயிர் வாழ்கிறது.
சில அறிதான உயிரிகள் தங்களின் பாலினங்களை மாற்றிக் கொள்ளும் திறனுடனும் இருக்கும். பெண் ஆணாக வும், ஆண் பெண்ணாகவும் மாற்றமடையும் தன்மை வாய்ந்த உயிரினங்கள்க் கூட தங்களின் மறு முளைப்புத் திறனை இழப்பதில்லை.
எனவே, இந்த இயற்கைச் சுழற்சியில் மறு முலைப்புத் திறனற்ற என்கின்ற பேச்சிற்கே இடமில்லை. இயற்கை யின் விதி இப்படி இருக்க, ஆண்மைக் குறைவு என்கின்ற சிக்கல் இயற்கைக்கு விரோதமாக எங்கிருந்து வருகிறது என்பதுதான் கவலைக்குரிய ஒரு கேள்வி.
இந்த நுன்னிய அரசியலை தான் நாம் நுணுக்கி ஆராய்ந்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் இயற்கை தவறிழைக்க வில்லை. நாம் தொடக்கத்திலேயே பார்த்தது போல், நமக்கிருக்கும் கட்டுப் பாடுகள், சட்டங்கள், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், பொருளாதாரப் போதாமைகள், அரசின் தவறான கொள்கைகள், இவையெல்லாம் கொடுக்கும் மன உளைச்சலும், நிச்சயமற்ற ஒரு வாழ்க்கை முறையும், குடும்ப வன்முறையும், குழந்தை வளர்ப்பில் இருக்கக் கூடிய போதாமைகளும், தாய் தந்தையர்களின் நடத்தையும், எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும் போன்ற பல சமூக காரணிகள் தான் இந்த மறுமுளைப்புத் திறனற்ற நிலை உருவாகக் காரணமாக இருக்கிறது.
இந்தச் சிக்கல்களை, ஒரு உளவியல் நிபுணரும், ஒரு MBBS மருத்துவர் மூலமுமே சரி செய்யக் கூடிய பிரச்சனைதான் இது. அப்படி அது முடியாத போது குழந்தை தேவையையும், அவசியத்தையும் உணர்ந்து அரசே செயற்கை கருவூட்டல் மையங்களை உருவாக்க முடியும். உருவாக்க வேண்டும்.
மிகப் பெரிய சமூக சிக்கலைக் கொண்டு போய் தனியார் கையில் கொடுப்பது என்பது முறையல்ல. இது தொடர்பான எந்த ஒரு புரிதலும் அற்ற அரசு நிர்வாகத்தின் போக்கைப் பயன்படுத்தி, செயற்கை கருவூட்டல் மையங்கள் மிக சாமர்த்தியமாக கொள்ளையடிக்கிறார்கள். இதனால் பல தம்பதிகள் மீளமுடியாத இழப்புகளுக்கும், துயரத்திற்கும் ஆளாகிறார்கள். தவறான வழிகாட்டல்கள் மூலம் குற்றவுணச்சிக்கு ஆளாகிறார்கள்.
தமிழகத்தில் சுமார் 200-க்கும் மேற் பட்ட கருத்தரிப்பு மையங்கள் செயல்பட்டு வருவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆனால் எந்தவொரு அரசு மருத்து வமனையிலும் இதற்கான சிகிச்சை மையம் இல்லை.
மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையில் 2007-ஆம் ஆண்டு முதல் செயற்கை கருத்தரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் இத்தகைய மையங்கள் உள்ளது.
No comments:
Post a Comment