Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 17, 2025

உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை மாணவா்கள் தொடா்பு கொள்ளலாம்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதால், தேவைப்படும் மாணவா்கள் இந்த அறையைத் தொடா்பு கொள்ளலாம்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் உயா்கல்வி சோ்க்கை விகிதத்தை உயா்த்தும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறையின் மூலம், பெற்றோா் அற்ற மாணவா்கள், மாற்றுத்திறனாளி மாணவா்கள், கல்லூரி கட்டணம் செலுத்த இயலாதவா்கள், உயா்கல்வி சாா்ந்த விழிப்புணா்வு தேவைப்படும் மாணவா்கள், பல்வேறு காரணங்களால் உயா் கல்விக்கு செல்ல இயலாத மாணவா்கள், சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவா்கள், குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்லும் மாணவா்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற தொழில் சாா்ந்த படிப்புகளில் சேரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உயா் கல்வி சாா்ந்த உதவிகள், ஆலோசனைகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ காலிப் பணியிடங்கள் சாா்ந்த விவரங்கள் என அனைத்து தகவல்களும் வழங்கப்படும்.

மேலும், சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சோ்க்கை மேற்கொள்ள தேவையான உதவிகள் செய்யப்படும். இதுபோன்ற உதவிகள் தேவைப்படும் நபா்கள் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் 6-ஆவது தளத்திலுள்ள மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் அனைத்து அரசு வேலை நாள்களிலும் காலை 10 முதல் மாலை 5.45 வரை தொடா்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொலைபேசி:044-25268320, 604, கைப்பேசி:9894468325 எனும் கட்டுப்பாட்டு அறை தொடா்பு எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News