Join THAMIZHKADAL WhatsApp Groups
ஜிப்மர் மருத்துவ கல்லுாரி நடத்தும் தொழில்நுட்ப ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜிப்மர், மும்பை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து மருத்துவ தொழில்நுட்ப ஹேக்கத்தான் போட்டி நடத்துகிறது. மருத்துவம் சார்ந்த சவால்களுக்கு எளிய தீர்வுகளை வெளிக்கொணரும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள இளநிலை மருத்துவ, தொழில்நுட்ப மாணவர்கள் 2, 4 பேர் குழுவாக இணைந்து தீர்வுகளை வழங்குவர்.
இதற்கான பதிவு வரும் 25ம் தேதி ஆன்லைன் மூலம் நடக்கிறது. இறுதி போட்டி வரும் அக்டோபரில் நடைபெறும். இந்த போட்டிக்கான கருப்பொருட்கள் பொது சுகாதாரம், இதயவியல், புற்றுநோயியல், மகளிர் மருத்துவம் உட்பட பல பிரிவுகளில் நடக்கிறது.
போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஜிப்மர், ஐ.ஐ.டி., நிபுணர்கள் வழிகாட்டுதல்களை வழங்குவர். மேலும் விபரங்களுக்கு www.incubate2025.in என்ற இணையதளத்தை மாணவர்கள் பார்வையிடலாம்.
No comments:
Post a Comment