Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 4, 2025

நீட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்குரிய தற்காலிக விடைக்குறிப்பு மற்றும் மாணவர்களின் விடைத்தாள்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோ பதி படிப்புகள் மற்றும் கால் நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப் பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே 4ம் தேதி நேரடி முறையில் நடைபெற்றது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் மாணவர்கள் வரை எழுதியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு மற்றும் மாணவர்களின் விடைத்தாள்களை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அவற்றை தேர்வர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

இதையடுத்து விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அதன் விவரங்களை உரிய ஆதாரங்களுடன் மேற்கண்ட தளத்தில் நாளைக்குள் (ஜூன் 5) பதிவுசெய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாகும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மாணவர்கள் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி எண்கள் அல்லது neetug2025@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புக் கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News