Join THAMIZHKADAL WhatsApp Groups
போக்குவரத்து போலீஸ் துறை தயாரித்த சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிகள் குறித்த சிறப்பு பாடம், அடுத்த கல்வியாண்டு முதல் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்படும் என, கர்நாடக பாடநுால் கழகம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் பள்ளி மாணவர்களிடம் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, போக்குவரத்து போலீஸ் ஒரு சிறப்பு பாடத்தை தயாரித்தது. இதை, மாணவர்களின் பாடப்புத்தகங்களில் சேர்க்கும்படி, பள்ளி கல்வி ஆராய்ச்சி துறையிடம் கோரிக்கையை வைத்தது. இந்த கோரிக்கை கர்நாடக பாடநுால் கழகத்திற்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து, கர்நாடக பாடநுால் கழகம் வெளியிட்ட அறிக்கை:
நடப்பு கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுவிட்டது. அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்களில், போக்குவரத்து விதிகள், சாலை பாதுகாப்பு குறித்த கட்டாயம் பாடங்கள் சேர்க்கப்படும்.
ஏற்கனவே, 2ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில், சாலை பாதுகாப்புகள் குறித்த தலைப்புகள் இணைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், போக்குவரத்து போலீஸ் துறையால் தயாரிக்கப்பட்ட, சிறப்பு பாடத்தை அடுத்த கல்வியாண்டில் சேர்ப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment