Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 11, 2025

500 MBBS இடங்களுக்கு இந்தாண்டும் அனுமதியில்லை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

அரசு மருத்துவ கல்லுாரிகளில், 500 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு இந்தாண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 36 அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளில், 5,200 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அதில், 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.

மேலும், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், 3,450 இடங்களும், தனியார் மருத்துவ பல்கலையில், 550 இடங்களும் உள்ளன. இதன்படி, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், 9,200 எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கான இடங்கள் உள்ளன.

பல் மருத்துவத்திற்கான, பி.டி.எஸ்., இடங்களை பொறுத்தவரை, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 250 இடங்களும், தனியார் கல்லுாரிகளில், 1,900 இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கு, https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை துவங்கியது.

இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்ட 10 மருத்துவ கல்லுாரிகளில், தலா 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மட்டுமே உள்ளன.

அதனால், ஒவ்வொரு கல்லுாரிக்கும் கூடுதலாக 50 என, 500 எம்.பி.பி.எஸ்., இடங்களை ஏற்படுத்தும்படி, தேசிய மருத்துவ ஆணையமான என்.எம்.சி.,யிடம், தமிழக மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம், இந்த ஆண்டும் விண்ணப்பித்திருந்தது.

மேலும், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியனும், டில்லி சென்று வலியுறுத்தி இருந்தார். ஆனால், பேராசிரியர்கள் பற்றாக்குறை, மருத்துவ கட்டமைப்பு குறைபாடு காரணமாக, ஏற்கனவே, 35 மருத்துவ கல்லுாரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து, என்.எம்.சி., கடிதம் எழுதியிருந்தது.

இதற்கு, தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், இந்த குறைபாடுகள் இருப்பதால், கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என, என்.எம்.சி., தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி கூறியதாவது:

மருத்துவ கல்லுாரிகளுக்கு என்.எம்.சி., வழங்கிய நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதை என்.எம்.சி.,யும் ஏற்று உள்ளது. அதேநேரம், கூடுதலாக, 500 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, கடந்த ஆண்டை போலவே இப்போதும் விண்ணப்பித்து இருந்தோம். அதற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே, ஏற்கனவே இருக்கும் இடங்களுக்கு தான், மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News