EB BILL | TANGEDCO அதிகாரப்பூர்வ தளத்தில் மின் பயனாளர்கள் மற்றும் மின் கட்டணம் செலுத்துவோர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது
.

செல்போன்களில் வரும் போலியான லிங்க் மூலம் மின்கட்டணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
மின் கட்டணம் தொடர்பான போலி SMS மீண்டும் உலா வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கை உடன் இருக்கும்படி மின்வாரியத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அண்மை காலமாக செல்போன்களில் மின் கட்டணம் தொடர்பான போலி SMS வருவது அதிகரித்து வருகிறது.
செல்போன்களில் வரும் லிங்க் மூலம் மின்கட்டணத்தை செலுத்தும் பொதுமக்கள் பணத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
தற்காப்பின் சிறந்த வழி, எந்த லிங்கையும் கிளிக் செய்யாமலும், அந்த எண்ணுக்கு அழைக்காமலும் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக TANGEDCO அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில், மின் கட்டணம் செலுத்த சொல்லி அறிவிக்கப்படாத எண்கள் அல்லது இணையத் தொடுப்புகளில் இருந்து வந்தால் அவற்றை தவிர்க்கவும் எனவும் அதிகாரப்பூர்வ வலைத்தளம்/மொபைல் செயலி மூலம் மட்டுமே மின் கட்டணம் செலுத்துங்கள் எனவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த பதிவில், மின் கட்டணத்தை செலுத்துவதற்கு அதிகாரப்பூர்வ TNEB மொபைல் செயலி மற்றும் இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல முடிவு பெறாத மற்றும் தாமதமான பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TANGEDCO அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தின் மற்றொரு பதிவில், "உங்களுக்கான சிறந்த சேவையை பெறுவதற்கு மின் இணைப்பு விண்ணப்பிக்கும் போது கணினி மையம் அல்லது முகவர்களின் மொபைல் எண்ணை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டாம்" எனவும், "உங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு மட்டுமே குறுஞ்செய்திகள் அனுப்பப்படும்" எனவும் தெரிவித்துள்ளது.
அதேபோல வீடுகளுக்கு வரும் மின்சார கட்டண நிலுவைத் தொகையை மின் வாரிய அதிகாரப்பூர்வ வலைதளம் வழியாக சரிபார்க்க வேண்டும் எனவும் இலவச தொலைபேசி எண் 1930- ஐ தொடர்புகொண்டு சந்தேகங்களை கேட்டறியலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.



No comments:
Post a Comment