Join THAMIZHKADAL WhatsApp Groups
அம்மோனியா அடிப்படையாகக் கொண்ட ஹேர் டை மட்டுமே வெள்ளை முடியைக் கருப்பாக்கும் ஒரே வழி அல்ல. இதற்கு மாற்றான சிறந்த வழிகள் உள்ளன.

நரை முடி பிரச்சனை என்பது தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் எதிர்கொள்ளும் முக்கிய கூந்தல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதற்கு வாழ்க்கை முறை மாற்றங்கள், ஆரோக்கியமற்ற உணவுத் தேர்வுகள் உட்பட பல காரணங்களாகச் சொல்லப்படுகிறது. இயற்கையான கருமை நிற கூந்தல் வெள்ளையாக மாறினால், அதனை மீண்டும் கருப்பாக அல்லது வேறு நிறத்தில் ஸ்டைலாகக் காட்ட ஹேர் டை பயன்படுத்துகிறார்கள்.
வயது குறைவானவர்களின் தோற்றத்தை அதிகமாகக் காட்டும் நரை முடி என்பதால்தான், மக்கள் பலவிதமான ஹேர் டைகளை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். செயற்கை நிறம் விரைவான தீர்வை வழங்கும் என நம்பப்படுகிறது. ஆனால், அம்மோனியா அடிப்படையாகக் கொண்ட ஹேர் டை மட்டுமே வெள்ளை முடியைக் கருப்பாக்கும் ஒரே வழி அல்ல. இதற்கு மாற்றான சிறந்த வழிகள் உள்ளன.
உங்கள் தலைமுடி முன்கூட்டியே நரைக்கத் தொடங்கியிருந்தால், இயற்கையாகவே அதைக் கட்டுப்படுத்தி, மீண்டும் கருப்பாக மாற்றலாம். நரை முடியைக் கருப்பாக்க சில சிறந்த வீட்டு வைத்தியங்களை இங்கே பார்க்கலாம்.
பல இளைஞர்களுக்குப் படிப்பை முடித்து சில ஆண்டுகளில் முடி நரைக்கத் தொடங்குகிறது. குறைந்த வயதிலேயே நரை முடி பிரச்சனையைச் சந்திக்கும் பலரும் தங்கள் வயதான தோற்றத்தை மறைக்க பல வழிகளைக் கையாளுகிறார்கள். இவர்கள் குழுவில் நீங்களும் ஒருவர் என்றால், இயற்கையாகவே வெள்ளை முடியை மீண்டும் கருப்பாக்க முடியும் என்பது நல்ல விஷயம் தானே? முடியின் இயற்கையான கருமை நிறம் பிக்மென்டேஷனைப் பொறுத்தது. சரியான பராமரிப்பு மற்றும் சரியான டயட் மூலம் இந்தப் பிரச்சனையை குறைக்கலாம்.
அதே சமயம், இயற்கையான முறையானது முன்பு போல முடியை முழுமையாகக் கருமையாக மாற்றாது, ஆனால் முடி முழுவதும் வெள்ளையாக இருக்காது. நரைத்த முடிக்கு இயற்கையான நிறம் ஓரளவுக்கு வரும், இதனால் அது கருப்பு முடியில் தனியாக கவனிக்கப்படாது. உங்களது வெள்ளை முடியைக் கருப்பாக்க இரண்டு சிறப்பு வீட்டு வைத்தியங்களை இங்கே பகிர்கிறோம். இவற்றால் பக்கவிளைவுகள் இல்லை.
இயற்கையான முறையில் நரை முடிகளை கருப்பாக மாற்ற ஹேர்பேக் தயாரித்து பயன்படுத்தலாம். இதற்கான ஹோம்மேட் ஹேர்பேக் தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.
முதலில், சுமார் 10 அல்லது 15 ஃப்ரெஷ் கற்பூரவல்லி இலைகளை இரும்புப் பாத்திரத்தில் எடுத்து, கைகளால் பிசைந்து சாறு முழுவதும் வெளியேறச் செய்ய வேண்டும். பிறகு இலைகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அதன்பின், 2 ஸ்பூன் அளவிற்கு கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை மிக்ஸியில் லேசாக அரைக்க வேண்டும். இதனை ஊற வைத்திருக்கும் கற்பூரவல்லி இலைகளுடன் சேர்க்கலாம்.
இப்போது சாறை மட்டும் வடிகட்டி எடுத்து, சிறிதளவு அவுரிப் பொடியுடன் கலக்க வேண்டும். இந்தக் கலவை பசைப் பதத்திற்கு வந்ததும், மற்றொரு பாத்திரத்தில் மாற்றி, 15 நிமிடங்கள் காற்றுப் போகாமல் மூடி வைக்க வேண்டும்.
இறுதியாக, இந்த ஹேர்பேக்கை தலையில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்தால், நரை முடிகள் கருப்பாக மாறும்.
No comments:
Post a Comment