Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 6, 2025

மாணவர் சேர்க்கைக்கு அரசு-தனியார் பள்ளிகள் போட்டி! கல்வி உபகரணங்கள் வழங்கி தாராளம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

கடலுார் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதால், பல்வேறு இலவசங்களை வழங்கி மாணவர்களை ஈர்த்து வருகின்றனர்.

கடலுார் வருவாய் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு பகுதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் தொடக்க, மெட்ரிக், மேல்நிலைப்பள்ளி என, மொத்தம் 2,224 பள்ளிகள் உள்ளன. அதில் தொடக்கப்பள்ளிகள் மட்டும் கடலுார், விருத்தாசலம் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 7 வட்டாரங்கள் உள்ளன.

கடலுார் கல்வி மாவட்டத்தில் மட்டும் 576 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வந்தனர். ஆண்டுதோறும் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.

கிராமப்புறங்களில் சொல்லவே வேண்டாம். பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் உள்ளன. இதற்கும் தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர், சத்துணவு அமைப்பாளர் என, பணியாளர்கள் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது.

கிராமப்புறங்களில் செயல்படும் ஒரு சில பள்ளிகளில் ஊழியர்கள் இருப்பதைக்காட்டிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இப்பிரச்னை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்ளன. ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் பள்ளியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதற்காக மாணவர்கள் சேர்க்கைக்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

இதற்காக ஆசிரியர்கள் பள்ளியில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வீடு வீடாக 'கேன்வாஸ்' செய்கின்றனர். பெற்றோர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களது பிள்ளைகளை தங்கள் பள்ளிக்கு இழுக்கின்றனர்.

சில பள்ளிகளில் மாணவர்களுக்கு சீருடை, புத்தகப்பை, வாட்டர் பாட்டில், பென்சில் கிட் போன்ற கல்வி உபகரணங்களை இலவசமாக வழங்குகின்றனர். இன்னும் சில பள்ளிகளில் மாணவர்கள் பயணிக்கும் வாகன வசதி இலவசமாக இலவாமாக வழங்கப்படுகிறது. இதில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல. இவர்களுக்கு போட்டியாக தனியார் பள்ளி ஆசிரியர்களும் நோட்டீசும் கையுமாக பெற்றோர்களை தேடி அலைந்து வருகின்றனர்.

ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களை எப்படியோ சிரமப்பட்டு பள்ளிகளில் கொண்டு வந்து உட்கார வைத்தால் கூட, சில ஆசிரியர்கள் தனது அதிகார பலத்தினால் மீண்டும் வேறு பள்ளிக்கு அழைத்து செல்லும் நிலை உள்ளது. ஆரம்ப பள்ளிகளில் மட்டும்தான் மாணவர்கள் சேர்க்கை குறைவு என்பதில்லை எல்லா வகுப்புகளிலும் இதே நிலைதான் உள்ளது.

கடலுாரில் உள்ள பல தனியார் பள்ளிகள் சில மெட்ரிக்கில் இருந்து சி.பி.எஸ்.இ., க்கு மாறியுள்ளன. ். ஆனால் அவர்களும் மாணவர்கள் சேர்க்கைக்கு முக்கியத்துவம் அளித்து, சிறிய அளவில் செயல்படும் தொடக்கப் பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள், பெற்றோரின் மொபைல் எண்களை வாங்கி சேர்க்கைக்கு படாதபாடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News