Sunday, June 15, 2025

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

தஞ்​சாவூர் சாஸ்த்ரா நிகர்​நிலை பல்​கலைக்​கழகத்​தின் 2025-2026-ம் ஆண்​டுக்​கான பொறி​யியல் சேர்க்​கைக்​கான தரவரிசைப் பட்​டியல் நேற்று வெளி​யிடப்​பட்​டது. இதில், சாஸ்த்ரா நிகர்​நிலைப் பல்​கலைக்​கழகத்​தின் பல்​வேறு பி.டெக். படிப்​பு​களுக்​கான சேர்க்​கைக்​கான தரவரிசைப் பட்​டியலில் 4 மாணவி​கள் முன்னிலையில் உள்​ளனர். முதல் பிரி​வில் (ஸ்ட்​ரீம் 1) (ஜேஇஇ மெயின் & 12-ம் வகுப்பு மதிப்​பெண்​களின் அடிப்​படை​யில் 50 சதவீத இடங்​கள்) ஆந்​திரப் பிரதேசத்​தின் கர்​னெலம்​பாளை​யத்​தில் உள்ள சைதன்யா ஜூனியர் கல்​லூரியைச் சேர்ந்த அகேலா மேகவன் சர்மா 99.39 மதிப்​பெண்​களு​டன் முதலிடம் பிடித்​துள்​ளார்.

இவர் 12-ம் வகுப்​பில் 1000-க்கு 991 மதிப்​பெண்​களும், ஜேஇஇ மெயின் தேர்​வில் 99.69 மதிப்​பெண்​களும் பெற்​றிருந்​தார். மேலும், தெலங்​கா​னா​வின் பேகம்​பேட்​டை​யில் உள்ள சைதன்யா ஜூனியர் கல்​லூரியைச் சேர்ந்த புர்ரா நிஷிதா 98.30 மதிப்​பெண்​களு​டன் 2-ம் இடத்​தைப் பிடித்​தார். இரண்​டாம் பிரி​வில்​(ஸ்ட்​ரீம் 2) 12-ம் வகுப்பு மொத்த மதிப்​பெண்​களின் அடிப்​படை​யில், தெலங்​கா​னா​வின் கம்​மம் எஸ்​.ஆர்​.ஜூனியர் கல்​லூரியைச் சேர்ந்த இந்​தூரி ரஷ்மிதா 1000-க்கு 996 மதிப்​பெண்​களு​டன் முதலிடத்​தை​யும், சென்னை கே.கே.நகரில் உள்ள பிஎஸ்​பிபி பள்​ளியைச் சேர்ந்த அக் ஷயா சிவகுரு 500-க்கு 498 மதிப்​பெண்​களு​டன் 2-ம் இடத்​தை​யும் பிடித்​தனர்.

இணையவழி மூலம்... விண்​ணப்​பங்​கள் நேற்று மாலை 5 மணி வரை பெறப்பட்​டு, உடனடி​யாக தர வரிசைப் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. எந்த நுழைவுத் தேர்​வை​யும் நடத்​தாமல் ஜேஇஇ முதன்மை தேர்வு மற்​றும் 12-ம் வகுப்பு மதிப்​பெண்​களை சேர்த்​து, அதன் அடிப்​படை​யில் மாணவர் சேர்க்​கையை சாஸ்த்ரா நிகர்​நிலை பல்​கலைக்​கழகம் நடத்​துகிறது. இவ்​வாறு சேர்க்கை நடத்​தும் ஒரே நிகர்​நிலைப் பல்​கலைக்​கழகம் சாஸ்த்ரா மட்​டும்​தான்.

விரி​வான தரவரிசை பட்​டியல்​கள் www.sastra.edu என்ற இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. தகுதி அடிப்​படையி​லான வெளிப்​படை​யான மாணவர் சேர்க்கை இணை​ய​வழி மூலம் இன்று (ஜூன் 15) முதல் நடை​பெற உள்​ளது. முதலில் மாணவர்​கள் பாடப் பிரிவை தேர்ந்​தெடுக்க வசதி​யாக வாய்ப்​பு​கள் வழங்​கப்​பட்​டு, பின்​னர் இடம் ஒதுக்​கீடு செய்யப்​படும். தஞ்​சாவூர் மற்​றும் திருச்சி மாவட்​டங்​களை சேர்ந்த மாணவர்​களுக்கு 20 சதவீத இடங்​கள் ஒதுக்​கீடு செய்​யப்பட உள்​ளன. நடப்​பாண்டு ஆக.1 முதல் வகுப்​பு​கள் தொடங்​கப்​படும் என்​றும் சாஸ்த்​ரா​வின் துணைவேந்​தர் எஸ்​.​வைத்​திய சுப்​பிரமணியம் தெரிவித்​துள்​ளார்.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application