Sunday, June 15, 2025

நடிகரும் , அரசியல் கட்சித்தலைவருமான திரு.விஜய் அவர்களை சந்தித்ததாக வெளியான ஊடகச்செய்திக்கு ஜாக்டோ - ஜியோ மறுப்

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி


கடந்த 13.06.2025 அன்று ஜாக்டோ ஜியோ சார்பில் நடிகரும் , அரசியல் கட்சித்தலைவருமான திரு.விஜய் அவர்களை சந்தித்ததாக வெளியான ஊடகச்செய்திக்கு ஜாக்டோ - ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக மறுப்பு தெரிவித்துக்கொள்கிறோம் . கடந்த 13.06.2025 அன்று நடிகரும் , தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான திரு.விஜய் அவர்களை தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் திரு.மாயவன் அவர்கள் சந்தித்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் சம்பந்தமாக பேசிய செய்தி என்பது ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சந்தித்துப்பேசியதாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திக்கு ஜாக்டோ - ஜியோ சார்பில் மறுப்பைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜாக்டொ - ஜியோ அமைப்பு தமிழ்நாட்டில் அரசு ஊழியர் , ஆசிரியர் அரசுப்பணியாளர்களின் கோரிக்கைகளுக்காக கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போராடிவருகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பேரமைப்பாகும். அப்படிப்பட்ட கோரிக்கைகளுக்காக எந்த ஆட்சியாக இருந்தாலும் சமரசமற்ற முறையில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி ஊதிய மாற்றம் , பறிக்கப்பட்ட உரிமைகள் மீளப் பெறப்பட்டது உள்ளிட்ட கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளது.

இன்றைக்கும் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மத்திய , மாநில அரசுகளிடம் தொடர்ந்து போராடி வருகிறது . இன்றைக்கும் தமிழ்நாடு அரசிடம் ஜாக்டோ - ஜியோ சார்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் , பல்வேறு கட்ட போராட்ட நடவடிக்கைகள் விளைவாகவும் அரசிடமிருந்து சரண்டர் , மகப்பேறு விடுப்பு பணிவரன்முறைக்கு சேர்ப்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகள் பெற்றுள்ளோம் . மேலும் , பழைய ஓய்வூதியத்திற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கை 30.09.2025 க்குள் பெறப்படும் என உத்திரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே , அரசிடமிருந்து நல்ல முடிவுகள் வரும் என்று எதிர்பார்த்து தற்காலிகமாக இயக்க நடவடிக்கைகளை ஒத்திவைத்துள்ளோம் . ஜாக்டோ - ஜியோ பேரமைப்பு அரசு ஊழியர் , ஆசிரியர் , அரசுப்பணியாளர் அமைப்புகள் சார்பாக பல்வேறு சங்கங்கள் கொண்ட கூட்டமைப்பாகும். இதில் பங்கேற்றுள்ள அந்தந்த சங்கங்களின் மாநில அமைப்புகளின் முடிவுகளுக்கேற்ப தனித்துவமாக செயல்படுவது அந்தந்த சங்கங்களின் தனிப்பட்ட முடிவாகும் . அதற்கும் ஜாக்டோ - ஜியோவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை . எனவே , ஜாக்டோஜியோ சார்பாக மேற்கண்ட நடிகர் மற்றும் சங்கத்தலைவர் அவர்களை சந்தித்ததாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது.

அதற்கும் ஜாக்டோ- ஜியோவிற்கும் எவ்வித சம்பந்ததமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் . எனவே பத்திரிக்கைகளில் இச்செய்தியை திரும்பப்பெறவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application