Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 14, 2025

மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவது சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!



பள்ளிக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் வரும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் பொருட்டு EMIS தொழில்நுட்ப குழுவால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணியினை விரைந்து முடிக்கும் பொருட்டு EMIS App இல் உள்ள மாணவர்கள் விவரங்கள் அனைத்தும் சரியானவை என சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களால் சரிபார்க்கப்பட்ட பின்னரே மாணாக்கர்களுக்கு பேருந்து பயண அட்டை வழங்க இயலும் என்பதால் தலைமையாசிரியர்கள் மாணவ / மாணவிகள் தற்போது பயிலும் வகுப்பு , மாணாக்கர்களின் விவரங்கள் மற்றும் மாணாக்கர்களின் புகைப்படத்தினை உள்ளீடு செய்யுமாறும் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் மாணவ / மாணவியர்களின் விவரங்களை சரிபார்த்து இலவச பேருந்து பயண அட்டை வழங்குமாறும் , வழங்கிய விவரம் வகுப்பு வாரியாக இவ்வியக்கத்திற்கு உடன் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

DSE - Free Bus Pass Proceedings - Download here

No comments:

Post a Comment