Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 6, 2025

Engineering Admission-க்கு 2.90 லட்சம் மாணவர்கள் பதிவு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


தமிழக இன்ஜினியரிங் சேர்க்கைக்கு, இதுவரை, 2.90 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் இன்ஜினியரிங் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 7ம் தேதி துவங்கியது. நேற்று மாலை 6:00 மணி நிலவரப்படி, 2 லட்சத்து, 90,678 மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர்.

இதில், 1 லட்சத்து 27,337 மாணவர்கள்; ௧ லட்சத்து 5,395 மாணவியர் என, மொத்தம் 2 லட்சத்து 32,732 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், நாளைக்குள், www.tneaonline.org இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து, வரும் 9ம் தேதிக்குள், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இது தொடர்பாக, மாணவர்களுக்கு சந்தேகம் இருந்தால், தமிழகம் முழுதும் உள்ள, 110 தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை நேரில் தொடர்புகொள்ளலாம் அல்லது 18004250110 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News