Join THAMIZHKADAL WhatsApp Groups
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, நீட் தேர்வு முடிவுகள் வரும் 14ல் வெளியாகிறது.
நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள்; சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சேர, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வை, தேசிய தேர்வுகள் முகமையான, என்.டி.ஏ., நடத்துகிறது.
அதேபோல், ராணுவ நர்சிங் கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் சேரவும், நீட் தேர்வு கட்டாயம். இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, கடந்த மாதம் 4ம் தேதி நடந்தது. இதில், 20 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கான விடைக் குறிப்பு மற்றும் விடைத்தாள்களை என்.டி.ஏ., நேற்று http://neet.nta.nic.in இணையதளத்தில் வெளியிட்டது.
விடைக்குறிப்பில் ஆட்சேபனை இருந்தால், உரிய ஆதாரங்களுடன் இன்று பதிவு செய்ய வேண்டும். வரும் 14ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும். மேலும் விபரங்களை, https://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.
நாளை முதல்
இதற்கிடையே சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், 2025 - 26 கல்வியாண்டுக்கான தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு மருத்துவ இடங்கள் இடப்பங்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டம் முடிந்த பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் கடந்த ஆண்டு வரை, நீட் தேர்வு முடிவு வெளியான பின் தான், இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிட்டு பெறப்பட்டன.
பல்வேறு காரணங்களால், நீட் தேர்வு முடிவு வெளியாவது தாமதமாகும் போது, மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் குறைவதால், மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
எனவே இந்த ஆண்டு முதல், நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே, நாளை முதல் இளநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சரிபார்ப்பு
மாணவர்கள் நீட் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய முடியாதோ என்ற சந்தேகம் கொள்ள தேவையில்லை. வழக்கமாகவே மாணவர்கள் பதிவேற்றம் செய்யும் நீட் தேர்வு மதிப்பெண்கள், தேசிய தேர்வு முகமை அளிக்கும் தரவுகளின் அடிப்படையிலேயே சரி பார்க்கப்படும்.
எனவே, தற்போதும் மாணவர் பதிவேற்றம் செய்யும், நீட் வரிசை எண் மற்றும் நீட் நுழைவுச்சீட்டு அடிப்படையில், தேசிய தேர்வு முகமை அளிக்கும் மதிப்பெண்கள் பெறப்பட்டு, இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின், விண்ணப்பம் சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்களுக்காக, விண்ணப்பத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நாளை முதல்
சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், 2025 - 26 கல்வியாண்டுக்கான தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு மருத்துவ இடங்கள் இடப்பங்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டம் முடிந்த பிறகு, அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் கடந்த ஆண்டு வரை, நீட் தேர்வு முடிவு வெளியான பிறகு தான், இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிட்டு பெறப்பட்டன. பல்வேறு காரணங்களால், நீட் தேர்வு முடிவு வெளியாவது தாமதமாகும் போது, மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் குறைவதால், மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
எனவே இந்த ஆண்டு முதல், நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே, நாளை முதல் இளநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணவர்கள் நீட் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய முடியாதோ என்ற சந்தேகம் கொள்ள தேவையில்லை. வழக்கமாகவே மாணவர்கள் பதிவேற்றம் செய்யும் நீட் தேர்வு மதிப்பெண்கள், தேசிய தேர்வு முகமை அளிக்கும் தரவுகளின் அடிப்படையிலேயே சரி பார்க்கப்படும். எனவே, தற்போதும் மாணவர் பதிவேற்றம் செய்யும், நீட் வரிசை எண் மற்றும் நீட் நுழைவுச்சீட்டு அடிப்படையில், தேசிய தேர்வு முகமை அளிக்கும் மதிப்பெண்கள் பெறப்பட்டு, இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின், விண்ணப்பம் சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்களுக்காக, விண்ணப்பத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும். அந்த கால அவகாசம், ஐந்து நாட்கள் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment