Join THAMIZHKADAL WhatsApp Groups
2025-ம் ஆண்டுக்கான NIRF தரவரிசையில் தமிழ்நாட்டில் முதல் 30 இடங்கள் பெற்ற மாநில பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை இந்தப் பதிவில் அறிந்து கொள்ளலாம். இதனை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/15/3QirQkkhe83d3qcBqnZw.jpg)
TNEA 2025: தமிழக டாப் 30 இன்ஜினியரிங் கல்லூரிகள் இவைதான்!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் அதிகமானோர் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரம் கோர் படிப்புகளான சிவில், எலக்ட்ரிக்கல் படிப்புகளுக்கு எப்போதும் மவுசு உள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறந்த வேலை வாய்ப்பு எதிர்காலம் இருப்பதால் இந்தப் படிப்புகளை படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், 2025-ம் ஆண்டுக்கான NIRF தரவரிசையில் தமிழ்நாட்டில் முதல் 30 இடங்கள் பெற்ற மாநில பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை இந்தப் பதிவில் அறிந்து கொள்ளலாம். இதனை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
முழுமையான பட்டியல் பின்வருமாறு:
பொறியியல் கல்லூரி, கிண்டி வளாகம்
மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) வளாகம்
எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி
பிஎச்.டி தொழில்நுட்பக் கல்லூரி
கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி
குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி
தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை
பிஎஸ்டி ஐ டெக்
அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்
அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி
சென்னை தொழில்நுட்பக் கல்லூரி
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி
ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
ஆர்எம்கே பொறியியல் கல்லூரி
வேலம்மாள் பொறியியல் கல்லூரி
மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி
ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, இரண்டாம் வளாகம்
செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி
அரசு பொறியியல் கல்லூரி, சேலம்
கொங்கு பொறியியல் கல்லூரி
ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி
சவீதா பொறியியல் கல்லூரி
கேபிஆர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி
அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர்
ஈஸ்வரி பொறியியல் கல்லூரி
வேல் டெக் மல்டி டெக் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லூரி
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி
பிஎஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
No comments:
Post a Comment