Subscribe Us

Wednesday, July 2, 2025

B.Tech லேட்ரல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு


பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 3ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ படித்த மாணவர்களுக்காக, 10 சதவீத பி.டெக்., இடங்கள் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகளில் ஆண்டு தோறும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவர்கள் பி.டெக்., படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.

இவர்களுக்கான சென்டாக் லேட்ரல் என்ட்ரி சேர்க்கை விண்ணப்ப படிவங்கள், கடந்த 11 ம் தேதி முதல் 26ம் தேதி வரை ஆன்-லைனில் (www.centacpuducherry.in) வினியோகிக்கப்பட்டது. மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்தனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்: எஸ்.சி.,எஸ்.டி.,மாற்றுதிறனாளி மாணவர்கள் 500 ரூபாய், இதர பிரிவு மாணவர்கள் 1,000 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

எவ்வளவு சீட்டு: புதுச்சேரியில் இரண்டு அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் மொத்தம் 344 பி.டெக்.,லேட்ரல் என்ட்ரி சீட்டுகள் உள்ளது. மாப் அப் கவுன்சிலிங்கிற்கு பிறகு காலியிடங்கள் இருந்தால், பிற மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிற மாநில மாணவர்களும் 1,500 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம்

No comments:

Post a Comment

Popular Feed