Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 13, 2025

SSC - 1,340 இளநிலை பொறியாளா் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 21 வரை அவகாசம்


மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள இளநிலை பொறியாளா் பிரிவில் 1,340 காலிப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு வரும் ஜூலை 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பணியாளா் தோ்வாணையம் (எஸ். எஸ்.சி.) அறிவித்துள்ளது.

இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் கட்டுமானப் பொறியியல் (சிவில்), இயந்திரவியல் (மெக்கானிக்கல்), மின்னியல் (எலக்ட்ரிக்கல்) பிரிவில் 1,340 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான தோ்வுக்கு வரும் ஜூலை 21-க்குள் https://ssc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான தோ்வுகள் வரும் அக்டோபா் மாதம் கணினி வாயிலாக நடைபெறவுள்ளன. தமிழகத்தில் சென்னை, வேலூா், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் இத் தோ்வு நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment