Sunday, August 3, 2025

6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடப்புத்தகம் வெளியீடு!

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

6 முதல் 10 ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கான உடற்கல்வி பாடத்திட்டம் புத்தகம் வெளியிடு

சென்னை, தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வியை கற்பிப்பதற்கான பாடப்புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விளையாட்டுப் போட்டிகளை கற்றுத் தருவதற்கும், உடற்கல்விக்கும் பாடப்புத்தகங்கள் இல்லை என உடற்கல்வி ஆசிரியர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். மேலும் 2017 ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பாடப்புத்தகங்கள் மாற்றி அமைக்கப்பட்டப் போது உடற்கல்விக்கான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு, கருத்துகள் பெறப்பட்டது. அதன் பின்னர் பாடப்புத்தகங்கள் வரும் என உடற்கல்வி ஆசிரியர்கள் எதிர்பார்திருந்தனர். ஆனால் 2024-25ம் கல்வியாண்டு வரையில் உடற்கல்விக்கு என தனியாக பாடப்புத்தகம் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் 2025ம் ஆண்டில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட புத்தகத்தில் 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வியை எவ்வாறு சொல்லிக் கொடுப்பது குறித்தும், மாணவர்கள் மாநில ,தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்பெறும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கவும் ,பதகங்களை வெல்லவும் சாதனை உணர்வை மேம்படுத்தவும் தங்களின் உடல் வலிமையை எண்ணிப் பெருமை காெள்ளவும் இத்திட்டம் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கல்வி ஆசிரியர்கள் உடற்கல்வியின் பல்வேறு கற்றுத் தருவதற்கு, உடலைப் பற்றிய கல்வியறிவு, விளையாட்டுக் கல்வி, பாதுகாப்புக்கல்வி மற்றும் உள்ளடங்கிய கல்வி ஆகியவற்றை தெரிந்திருக்க வேண்டும்.

உடலைப் பற்றிய கல்வியறிவு:

உடற்திறன் கல்வி என்பது உடலின் அடிப்படை இயக்கத் திறன்களை அறிவதையும் உடல் செயல்பாடு தொடர்பான கருத்துகளைப் புரிந்து கொள்வதையும் குறிக்கிறது. எண்ணும் எழுத்தும் எவ்வாறு கற்பதற்கு அவசியமோ அது போலவே, உடற்திறன் கல்வி ஆரோக்கியமான மற்றும் செயல்பாடுமிக்க வாழ்க்கையைக் கற்றுக்கொள்ள அவசியமாகிறது.

உடல் இயக்கங்களுக்கான அடிப்படைத் திறன்களிலிருந்து தொடங்குவதற்கு, ஓடுதல், குதித்தல், எறிதல் மற்றும் பிடித்தல் போன்ற அடிப்படையான உடல் இயக்கத் திறன்களில் கவனம் செலுத்தி, மேலும் சிக்கலான இயக்கங்களுக்கான அடிப்படைகளை உருவாக்குதல் வேண்டும்.

உடல் திறன்களையும் கருத்துகளையும் படிப்படியாக அறிமுகப்படுத்துவதன் மூலம் மாணவர்கள் உடல் திறன்களை மேம்படுத்திக் கொள்ள உதவ வேண்டும்.

பல்வேறு உடல் செயல்பாடுகளையும் விளையாட்டுகளையும் வழங்கி, மாறுபட்ட உடல் இயக்கச் செயல்பாடுகள் மற்றும் உடல் திறன்களை வளர்க்க வேண்டும் உடல் திறன்களை பல்வேறு சூழலில் பல முறை பயிற்சி செய்யும் வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

உடல் வளர்ச்சி:

உடல் வளர்ச்சி என்பது ஒரு மனிதரின் உடல் இயக்கத்திறன்களின் வளர்ச்சியைக் குறிக்கிறது. இதிலே உடல் இயக்கத் திறன்களும் உடல் செயல்பாடுகளும் அடங்கும்.

உடற்பயிற்சி. சரியான உணவு மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் உடல் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம், தனிநபர் தனது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

மாணவர்களின் வளர்ச்சி நிலைக்கு ஏற்றவாறு செயல்பாடுகளை ஏற்படுத்தி. மாணவர்கள் செய்து முடிக்கக் கூடிய போட்டிக்கான சவால்களை அளிக்க வேண்டும்.

இதய சுவாச உடற் செயல்பாடு, தசை வலிமை, நெகிழ்வு மற்றும் பொறுதித் திறன் மேம்படுத்தும் உடற்பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

மாணவர்கள் தங்கள் உடல் வளர்ச்சியைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, இலக்குகளை அடைவதற்கான பின்னூட்டங்களை வழங்க வேண்டும்.

விளையாட்டுக் கல்வி:

விளையாட்டுக் கல்வி என்பது விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடுகளைப் பாடத்திட்டத்தில் ஒன்றிணைத்து, முழுமையான வளர்ச்சியை ஊக்குவிப்பதைக் குறிக்கிறது. இது விளையாட்டு நடத்தை, நியாயமான ஆட்டம். மதிப்பு மற்றும் பொறுமையாக நிலைத்து நிற்கும் தன்மை ஆகியவற்றைக் கற்றுத்தருகிறது. இவை தனிப்பட்ட மற்றும் சமூக வளர்ச்சிக்கு முக்கியமானது.

பல்வேறு விளையாட்டுகளின் விதிமுறைகள் மற்றும் உத்திகளை தெளிவாக விளக்குவதன் மூலம் நியாயமான ஆட்டத்தை மற்றும் விளையாட்டு நடத்தையும் மாணவர்களிடம் உருவாக்க வேண்டும்.

மாணவர்களின் திறன்களை வகுப்புகளுக்கு இடையிலும் பள்ளிகளுக்கு இடையிலும் போட்டிகளை நடத்தி வளர்க்க வாய்ப்பளிக்க வேண்டும்.

குழு விளையாட்டுகளில் குழுப்பணி, தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மாணவர்களிடையே நேர்மறையான தொடர்புகளை ஊக்குவிக்க வேண்டும்.

தடகள நிகழ்வுகள்:

அனைத்து நிகழ்வுகளையும் அறிமுகப்படுத்துதல்: ஓடுதல். குதித்தல், எறிதல் மற்றும் தொடரோட்டம் (ரிலே) உள்ளிட்ட பல்வேறு தடகள நிகழ்வுகளை மாணவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

சரியான தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுத்தல் ஒவ்வொரு நிகழ்வுக்கும் சரியான தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுத்து. உடல் செயல்திறனை அதிகரிப்பதோடு காயங்களின் அபாயத்தை குறைக்க வேண்டும்.

மாணவர்களுக்குத் தடகள நிகழ்வுகளில் தங்களது உடல் திறன்களை மேம்படுத்த பயிற்சிகளையும் அமர்வுகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டுப்புற விளையாட்டுகள் மற்றும் மனமகிழ் வினையாட்டுகள்:

பொழுது போக்கிற்குப் பயன்படும் மகிழ்ச்சிதரும் விளையாட்டுகள் வேடிக்கைக்கும் நேர்மையான அனுபவங்களுக்கும் முன்னுரிமை அளிக்கின்றன. இவை மகிழ்ச்சியையும் சமூக உணர்வையும் பரவச் செய்வதன் மூலம் வாழ்க்கையை வளப்படுத்துகின்றன.

தமிழ் மரபு விளையாட்டுகள்

தமிழ்க் கலாச்சாரத்தில் தலைமுறை தலைமுறையாகப் பரிமாறப்பட்டுள்ள பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை குறிக்கின்றன. அவை சமூகத்தின் மதிப்புகள், பழக்கவழக்கங்கள் மற்றும் சமூக இயக்கவியல் ஆகியவற்றை பிரதிபலிக்கும் ஒரு வளமான கலாச்சார பாரம்பரியமாகச் சேவை செய்கின்றன.

மாணவர்களுக்குப் பாரம்பரிய தமிழ் விளையாட்டுகள் மற்றும் அதன் பண்பாட்டுப் பெருமையை அறிமுகப்படுத்துங்கள். மகிழ்ச்சியான மற்றும் ஆர்வத்துடன் ஈடுபடுத்தும் விளையாட்டுகளையும் செயல்பாடுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கதைகளைப் பகிருதல்: தமிழ்நாட்டுப்புற விளையாட்டுகள் தொடர்பான கதைகளையும் நிகழ்வுகளையும் பகிர்ந்து, மாணவர்கள் அவர்களின் கலாச்சார வேர்களை புரிந்துகொண்டு பாராட்டும் மனப்பாங்கை மேம்படுத்துதல் மற்றும் மாணவர்தம் விழுமியங்களை மேம்படுத்துங்கள்.

ஆசனங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சிகள்:

ஆசனங்கள் என்பது பல்வேறு உடல் நிலைகளைக் குறிக்கின்றன. அவை உடல். மனம் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைக்கும். முழுமையான நல்வாழ்வுக்கான பரிபூரண அணுகுமுறையாகும். ஆசனங்கள் மற்றும் மூச்சுப்பயிற்சிகள் தியானத்தில் முக்கியமானது. அவை உடல்,மன, மனவெழுச்சி நலத்தை மேம்படுத்தும்.

பல்வேறு ஆசனங்கள் மற்றும் மூச்சுப்பயிற்சிகளின் சரியான சீரமைப்பையும் நுட்பத்தையும் விளக்குங்கள். மாணவர்களுக்கு ஆசன பயிற்சியின்போது அவர்களின் மூச்சை கவனமாக கவனித்து, தமது உடல் மற்றும் மனதைப் பற்றிய விழிப்புணர்வை வளர்க்க ஊக்குவியுங்கள்.

மாற்றுத்திறனாளி மாணவருக்கான மாற்றங்கள் மற்றும் பொருந்தும் ஏற்பாடுகளை வழங்கி, உள்ளடங்கிய உடற்கல்வி அணுகுமுறையையும் உறுதி செய்யுங்கள்.

விளையாடும்போது ஏற்படும் காயங்கள் மற்றும் பாதுகாப்பு கல்வி:

விளையாட்டுக் காயங்கள் என்பது விளையாட்டுப் போட்டிகளின்போது ஏற்பட்ட உடல் பாதிப்பு அல்லது காயங்களைக் குறிக்கின்றன. இதற்குள் சிறிய முறிவுகள் முதல் தீவிரமான மூளை அதிர்ச்சி போன்றவை அடங்கும். பாதுகாப்பு கல்வி என்பது மனிதர்களுக்குச் சாத்தியமான அபாயங்கள், ஆபத்துகள் மற்றும் தடுப்புநடவடிக்கைகளைப் பற்றிக் கற்றுத்தந்து அவர்களுடைய நல்வாழ்வை உறுதி செய்வதாகும்.

உடற்பயிற்சியின்போது காயங்களைத் தடுக்க. ஆயத்த பயிற்சி, நீட்டுதல் (Stretching) பயிற்சி மற்றும் சரியான நுட்பத்தின்முக்கியத்துவத்தை வலியுறுத்தவும்.

பொதுவான விளையாட்டுக் காயங்களை அடையாளம் கண்டு. அவற்றை எப்படி குணப்படுத்துவது என்பதையும் அடிப்படை முதலுதவி மற்றும் மருத்துவ உதவி எப்போது தேவைப்படும் என்பதையும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தல்.

விளையாட்டு நடவடிக்கைகளுக்கு சரியான பாதுகாப்புக் கருவிகளான தலைக்கவசம், விளையாட்டுப் பட்டைகள் போன்ற உபகரணங்களையும் பயன்படுத்துவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும்.

சிறப்பு தேவைகளுடைய குழந்தைகளை உள்ளடக்கிய கல்வி:

தனிக் கவனம் செலுத்துதல்: தனித்துவமான தேவைகள் மற்றும் திறன்களுக்கேற்ற நடவடிக்கைகளையும் பயிற்சியையும் ஏற்படுத்தி.சரியான வசதிகள் மற்றும் உதவிகளை வழங்குதல்.உள்ளடக்கியகல்வியைவழங்குதல்: அனைத்து மாணவர்களும் மதிப்புக்குரியவர்களாகவும் உள்ளடக்கப்பட்டவர்களாக உணரக்கூடிய ஆதரவான மற்றும் உள்ளடக்கமான சூழலை உருவாக்கி மாணவர்களுக்கிடையில் பரிவினையும், மதிப்பின் முக்கியத்துவத்தையும் வழங்கச் செய்தல் வேண்டும்.

மேலும் மாணவர்களுக்கு செய்துகாட்டல், செயல்விளக்கம் அளித்தல், விளையாட்டுகள், பயிற்சிகள், ஆசனங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சிகளில் மாணவர்களை ஈடுப்படுத்தும் போது, அவர்களின் உடல்நிலை ,சூழல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து ஆசிரியர்கள் செயல்பாடுகளை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தகவலுடன், விளையாட்டுகளை கற்றுத்தரும் முறைகளையும் தெரிவித்துள்ளனர். மேலும் உடற்கல்வி பாடத்தில் நடைபெறும் தேர்விற்கான மாதிரி வினாத்தாளின் மதிப்பெண்களையும் அறிவித்துள்ளனர்.

Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application