Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 8, 2025

ரூ.55.60 இலட்சம் மதிப்பீட்டில் 170 மாணவர்களுக்கு AI கண்ணாடிகள்


ரூ.55.60 இலட்சம் மதிப்பீட்டில் 170 மாணவர்களுக்கு AI கண்ணாடிகள் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு.

பன்னாட்டு அரிமா சங்கங்கள் சார்பாக(அரிமா மாவட்டம்: 3242E) பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு கண் கண்ணாடிகளை வழங்கும் விழா சேலம் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

மாண்புமிகு அமைச்சர் @SalemRRajendran அவர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு AI கண்ணாடிகளை வழங்கினோம். ரூ.55.60 இலட்சம் மதிப்பீட்டில் 170 மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அறிவியல் என்பதும், புதிய கண்டுபிடிப்புகள் என்பதும் நிலாவிற்கு செல்வது மட்டுமல்ல. புதிய கோள்களை கண்டுபிடிப்பது மட்டுமல்ல. எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய சாதனங்களை கண்டுபிடிப்பதுதான் அறிவியலின் நோக்கமாக இருக்க வேண்டும். இதை இந்த AI கண் கண்ணாடி நிறைவேற்றியுள்ளது என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

No comments:

Post a Comment