இந்த விதியைத்தான் உச்ச நீதிமன்றம் உரக்க சொல்லியிருக்கிறது.
உண்மையில் உச்சநீதிமன்றம் ஒரு நன்மையை செய்திருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 142 ஐ பயன்படுத்தி ஐந்து வருடங்களுக்கு குறைவாக பணிக்காலம் உள்ள ஆசிரியர்களுக்கு ஒரு விலக்கு அளித்திருக்கிறது.
1. 2001 க்கு முன் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு TET தேவை இல்லை என NCTE Regulations சொல்கிறதே ?
அவர்களுக்கு ஏன் விலக்கு அளிக்கப்படவில்லை?
2. RTE சட்டம் NCTE Regulations ஐ விட மேலானது (Override). அதனால் rte சட்டமே மேலோங்கும்
2. 2001 க்குப் பின் நாங்கள் TRB எழுதித்தானே பணிக்கு வந்தோம்? ஆம். இதை உச்ச நீதிமன்றம் பரிசீலித்திருக்கலாம். ஆனால் RTE சட்டத்தில் TET தான் குறைந்த பட்ச தகுதி என்று சொல்லப்பட்டால் அந்த விதியை அப்படியே அமல் படுத்த உச்ச நீதிமன்றம் முடிவு செய்துவிட்டது.
3. அப்படியானால் எல்லோரும் TET தேர்ச்சி பெற வேண்டுமா?
01.09.2025 தேதியில் 5 வருட பணி காலம் உள்ள அனைவரும் இரண்டு ஆண்டு காலத்திற்குள் TET தேர்ச்சி பெற வேண்டும் வேண்டும். ஐந்து வருடத்திற்கு குறைவான பணிக்காலம் கொண்டவரும் பதவி உயர்வு வேண்டுமென்றால் TET தேர்ச்சி பெற வேண்டும்.
4. தமிழகத்தில் RTE சட்டம் நடைமுறைக்கு வந்த 29.08.2011 க்கு முன் நியமனம் பெற்ற ஆசிரியர்களும் TET தேர்ச்சி பெற வேண்டுமா?
தற்போதுள்ள தீர்ப்பின்படி நிச்சயமாக TET தேர்ச்சி பெற வேண்டும்.
5. கேரளா, கர்நாடகா , ஆந்திரா பிற மாநிலங்கள் அவர்களின் அரசாணைகள் வழியே விலக்கு அளித்துள்ளதே ?
அவை எதுவும் செல்லாது.
பொதுப் பட்டியலில் கல்வி இருப்பதால் மத்திய அரசும் (நாடாளுமன்றத்தில் இயற்றபடுகிற சட்டம்) , உச்ச நீதிமன்றமும் எடுக்கின்ற முடிவே இறுதியானது. *இதற்கு எதிராக எந்த மாநில அரசுகளும் கொள்கை முடிவு எடுக்க இயலாது.*
6. இந்த வழக்கில் வாதி, பிரதிவாதிகளாக உள்ள தமிழ்நாடு மகாராஷ்டிரா போன்ற மாநில ஆசிரியர்களுக்கு மட்டும்தான் இந்த தீர்ப்பு பொருந்துமா?
அனைத்து மாநில ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.
7. இதிலிருந்து தப்பிக்க வேறு ஏதேனும் வழிகள் உள்ளதா?
1. மத்திய அரசு RTE சட்டத்தில் , இந்த சட்டம் Notify செய்யப்பட்ட தேதிக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு விலக்கு அளித்து திருத்தம் கொண்டு வரலாம்.
2. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
3. மாநில அரசே சிறப்பு தகுதி தேர்வு நடத்தலாம்.
3. தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்கலாம்.
4. இரண்டு வருட காலத்தில் எத்தனை தேர்வுகளை வேண்டுமானாலும் நடத்தலாம்.
5. ONLINE தேர்வுகளை நடத்தி உடனடியாக முடிவுகளை வெளியிடலாம்.



No comments:
Post a Comment